இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

கராச்சி (09 மார்ச் 2022): 1999 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி சென்ற IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களில் ஒருவரான மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி என கருதப்படும் மிஸ்ட்ரி ஜாகூர் இப்ராகிம் , மார்ச் 1 அன்று கராச்சியின் அக்தர் காலனியில் அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸின் IC-814 விமானம், 179 பயணிகள் மற்றும்…

மேலும்...

இம்ரான் கான் பதவிக்கு ஆபத்து – பாகிஸ்தானில் பரபரப்பு!

இஸ்லாமாபாத் (14 பிப் 2022): பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதால், அவரது பதவிக்கு ஆபத்து முற்றியுள்ளது. லாகூரில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், நவாஸ் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, அவருக்கு அடுத்ததாக பிரதமராக யாரை முன்னிறுத்துவது என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்க…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை!

ஐதராபாத் (10 பிப் 2022): இந்தியாவில் ஹிஜாப் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தலையிட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...

74 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட சகோதரர்கள் – இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் நெகிழ்ச்சி!

பஞ்சாப் (13 ஜன 2022): 74 வருட காத்திருப்புக்குப் பின் இறுதியாக கண்ணீருடன் இரு சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும் கட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் பைசலாபாத் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தியாவின் பஞ்சாபில் வசிக்கும் முகமது ஹபீப் ஆகியோர் 74 வருட காத்திருப்புக்குப் பிறகு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். முஹம்மது சித்திக் 1947 பிரிவினையின் போது சிறு குழந்தையாக இருந்தார். சித்திக் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு வந்தபோது, ​​அவரது…

மேலும்...

சாதனை மேல் சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

கராச்சி (14 டிச 2021): டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன், முதலில் பந்து வீச…

மேலும்...

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் – பிரகாஷ் ராஜ்பஹர்!

புதுடெல்லி (12 நவ 2021): இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே தவிர முஹம்மது அலி ஜின்னா அல்ல என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் பிரகாஷ் ராஜ்பஹர் தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா அல்ல ஆர்எஸ்எஸ் தான் காரணம் என்று சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பஹர் கூறியுள்ளார். முகமது அலி ஜின்னாவை இந்தியாவின் முதல் பிரதமராக்கியிருந்தால் இந்தியா பிளவுபட்டிருக்காது பிரிவினைக்கு ஜின்னா…

மேலும்...

இவங்களுக்கு வேற வேலையே இல்லை – இப்போது ஆப்கானிஸ்தானை கையில் எடுத்துள்ளார்கள்!

பாட்னா(19 ஆக 2021): அரசை விமர்சிப்பர்வர்கள் ஆப்கானிஸ்தான் செல்லாம் என்று பிகார் பாஜக எம்.எல். ஏ ஹரிபூஷன் தாக்கூர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளதாக எதிர் காட்சிகள் விமர்சிக்கும் நிலையில் , பீகாரில் பிஸ்ஃபி தொகுதியின் எம் எல் ஏ ஹரிபூஷன் தாக்கூர், அரசை விமர்சிப்பவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம் என்றார். மேலும் ,அவர் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மலிவானவை என்றும் , இந்திய அரசை எதிர்ப்பவர்கள் அங்கு…

மேலும்...

கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் – ஆய்வு தகவல்!

புதுடெல்லி 02 ஜுலை 2021): இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது ட்விட்டரில் இந்தியாவுக்காக அதிகம் பிரார்த்தித்த நாடு பாகிஸ்தான் என்பதாக அமெரிக்காவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகம் (சி.எம்.யூ) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா கொரோனா இரண்டாவது அலை பாதிப்பிலும், கடுமையான ஆக்ஸிஜன் நெருக்கடியையும் எதிர்கொண்டிருந்த நேரத்தில் #IndiaNeedsOxygen மற்றும் #PakistanStandsWithIndia போன்ற ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்தன. இவற்றின் அடிப்படையில், ஏப்ரல் 21 முதல் மே 4 வரையிலான இதுபோன்ற 300,000 க்கும்…

மேலும்...

பாகிஸ்தான் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி!

இஸ்லாமாபாத் (02 மே 2021): பாகிஸ்தானில் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு பாக்வாக் என் பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசிநேற்று (01.06.2021) அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று!

இஸ்லாமாபாத் (20 மார்ச் 2021): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார். மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார். பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...