சட்ட அமைச்சரின் வெற்றி செல்லாது – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

அகமதாபாத் (12 மே 2020): குஜராத் மாநில சட்த்துறை அமைச்சர் புபேந்திரசிங் சூடஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்கா தொகுதியில் புபேந்திரசிங் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரத்தோட்டைவிட 327 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த தோல்கா துணை…

மேலும்...

கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை – பாஜக தலைவர் பகீர் தகவல்!

சென்னை (02 மே 2020): கல்யாணராமனுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் பேசி வருபவர் கல்யாணராமன். அவர் தன்னை பாஜகவில் பொறுப்பில் உள்ளதாகவே காட்டிக் கொள்வார். இந்நிலையில் இன்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” கல்யாணராமன் பாஜகவின் எந்தவித பொறுப்பிலும் இல்லை. அவர் சமூக வலைதளங்களில் கூறும் கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும்…

மேலும்...

பண மோசடி செய்தவர்களை மறைத்தது ஏன்? பாஜகவின் கூட்டாளிகள் என்பதாலா? – ராகுல் காந்தி விளாசல்!

புதுடெல்லி (29 ஏப் 2020): நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ. 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து ராகுல் காந்தி பாஜகவை கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை…

மேலும்...

எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த பாஜக!

சென்னை (18 ஏப் 2020): “கொரோனா குறித்து எதிர்கட்சிகளுடன் விவாதிக்க எதிர் கட்சி தலைவர்கள் என்ன மருத்துவர்களா?” என்ற முதல்வர் எடப்பாடியின் கருத்துக்கு பாஜக கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்குக் கோரிக்கை வைத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தக் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மருத்துவ ஆலோசனை பெற எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? கரோனா…

மேலும்...

9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பாஜக தலைவர் கைது!

கண்ணூர் (17 எப் 2020): கேரளாவில் 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பா.ஜ.க தலைவர் பத்மராஜனை போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் திருப்பங்கோட்டூர் பாலதாயி பள்ளியின் ஆசிரியர் பத்மராஜன். இவர் பா.ஜ.கவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் மீது 9 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதில்,பத்மராஜன் பாலதாயி பள்ளியில் படிக்கும் தனது 9 வயதான குழந்தையை பாலியல்…

மேலும்...

கொரோனா வைரஸ் லாக்டவுன்: நூற்றுக் கணக்கானோருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்!

பெங்களூரு (11 ஏப் 2020): உலகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்க எதைப் பற்றியும கவலைப்படாமல் தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம். தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் மத பிரார்த்தனைக் கூட்டங்களைக்கூட அனைத்து…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் குறித்து வந்த தகவல் பொய்யானது – துணை ஆணையர் விளக்கம்!

பெங்களூரு (07 ஏப் 2020): “தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து பாஜக எம்பி வெளியிட்ட தகவல் பொய்யானது.” என்று துணை ஆணையர் தெரிவித்துள்ளார். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டு நாடெங்கும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் அளிக்கப் பட்டு வருகின்றன. இதற்கிடையே தப்லீக் ஜமாஅத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நேற்று…

மேலும்...

பிரதமர் மோடியின் கோரிக்கையை மீறிய பாஜக எம்.எல்.ஏ!

ஐதராபாத் (06 ஏப் 2020): விதிகளை மீறி கூட்டமாக நின்று பாஜக எம்.எல்.ஏ கொரோனாவுக்கு எதிராக நடத்திய தீப்பந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகள் இதனை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை அணைத்து 9 நிமிட நேரம் அகல் விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி…

மேலும்...

ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் கைது!

மன்னார்குடி (14 மார்ச் 2020): தமிழிசை சவுந்தரராஜன் சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்த மன்னை சாதிக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவ்வப்போது கோமாளித்தனமாக பதிவிட்டு பிரபலமானவர் மன்னை சாதிக். இவர் தமிழக முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதனை அடுத்து ரகுராமன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மன்னார்குடி போலீசார் மன்னை சாதிக்கை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும்...