இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக சில ஆதாரங்களையும் காண முடிந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் யாரானாலும் அவர்களை அவரவர்களின் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்ய முன் வந்தனர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். இதற்காக அவர்களுக்கு அனுமதி கடிதத்தையும்…

மேலும்...

வீட்டில் இருக்க முடியாவிட்டால் சிறையில் இருக்க நேரிடும் – புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை!

புதுச்சேரி (24 மார்ச் 2020): ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டில் இருக்காமல் வெளியில் சுற்றினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார். உலகில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையே 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து…

மேலும்...

புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு!

புதுச்சேரி (21 மார்ச் 2020): கொரோன வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஒருவாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெளியில் வந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். என்று முதல்வர் நாராயணசாமி உத்தரவு…

மேலும்...

கோழி இறைச்சி கடைக்கு சீல்!

புதுச்சேரி (21 மார்ச் 2020): புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சலுகை விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்து, கூட்டத்தை கூட்டிய கடைக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கோழிஇறைச்சியால் கொரோனா பரவவில்லை என்பதை தெரிவிப்பதற்காக, சலுகை விலையில் கோழிகள் விற்கப்படுவதாக அக்கடையில் விளம்பரம் வைக்கப்பட்டது. இதை பார்த்து நூற்றுக்கணக்கான மக்கள் கடை முன்பு கூடினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதெனக்கூறி, கூட்டத்தை கலைத்ததோடு, கோழிக்கடைக்கு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையிலும் நிறைவேறியது!

புதுச்சேரி (12 பிப் 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி…

மேலும்...