சமையல் கியாஸ் விலையும் உயர்வு – வேறு என்ன விலையெல்லாம் அதிகரிக்குமோ ?

புதுடெல்லி (15 பிப் 2021): இன்று சமையல் கியாஸ் விலையை மாற்றி அமைத்து மத்திய பெட்ரோலிய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் கொண்ட சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.735 ஆக…

மேலும்...

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்வு – பொதுமக்கள் அவதி!

சென்னை (13 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது….

மேலும்...

10 நிமிட சார்ஜில் 400 கிலோ மீட்டர்: சூப்பர் பேட்டரி!

நியூயார்க்(19/01/2021): வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்த கவலையும் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எடுத்துவருகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கடந்து காற்றை மாசுபடுத்தாத பேட்டரி சார்ஜ் மூலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், எண்ணெயில் இயங்கும் வாகனங்கள் அளவுக்கு…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சென்னை (21 ஜூன் 2020): பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களீன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது . அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக்…

மேலும்...

போற போக்கை பார்த்தால் யாரும் வாகனமே வாங்க மாட்டங்க போல!

சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ்…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வு!

சென்னை (05 ஜன 2020): பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.78.48 ஆகவும், நேற்றைய விலையில் இருந்து டீசல் 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.39 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மேலும்...