சந்திரசேகர் ஆசாத்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பிம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு தலைமை தாங்கியதை அடுத்து சந்திரசேகர் ஆசாத் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியுள்ளது. ஆனால்…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரள முதல்வரின் அடுத்தடுத்த அதிரடி!

திருவனந்தபுரம் (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வரும் மாநில அரசுகளில் கேரள அரசு முதன்மை வகிக்கிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க ஆளாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ, அதோடு சேர்ந்த தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) – தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றையும் செயல்படுத்த…

மேலும்...

மாணவர்களை நேரடியாக சந்திக்க தைரியம் உண்டா? – மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி (13 ஜன 2020): மாணவர்களை சந்திக்க மோடி பயப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட 20 கட்சிகளை சேர்ந்த…

மேலும்...

வரலாற்றில் எழுதப்படும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டம்!

புதுடெல்லி (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன? – மழுப்பும் காவல்துறை!

மீரட் (13 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்து போலீசார் சரியான தகவல் சொல்லவில்லை என கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். மீரட் நகரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, இதுவரை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடந்த போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலேயே பலர் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டத்தை கலைப்பதற்காக காவலர்கள்…

மேலும்...

குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய…

மேலும்...

டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…

மேலும்...

தீபிகா படுகோன் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

மும்பை (09 ஜன 2020): நடிகை தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோன் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீபிகா படுகோன் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் தாஜேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக எதை எதிர்த்தாலும் அது விளம்பரமாக அமைந்து எதிர் தரப்புக்கு…

மேலும்...

போராட்டம் எதிரொலி – மோடி அமித் ஷா அசாம் செல்வதை நிராகரித்தனர்!

புதுடெல்லி (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் எதிரொலியாக மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு ‘கேலோ இந்தியா’ இளைஞர் விளையாட்டு திருவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விழாவில் பங்கேற்பதை மோடி…

மேலும்...