அதெல்லாம் ஒப்புக்க மாட்டாங்க – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

சென்னை (01 செப் 2020): நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம் என்பதை ஒருபோதும் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 24 சதவீதம் சரிந்திருப்பது அவமானம் எனவும், மத்திய அரசு தனது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது எனவும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு.ப.சிதம்பரம் சாடியுள்ளார். இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி, இதுபோன்ற ஆழமான பாதாளத்துக்கு செல்லும் என்பதை…

மேலும்...

நீட் தேர்வு ஒத்தி வைப்பா? – மத்திய அமைச்சகம் பதில்!

புதுடெல்லி (21 ஆக 2020): நீட் மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளை ஒத்தி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர்…

மேலும்...

மத்திய அரசின் சதித்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- வை.கோ. கடும் கண்டனம்!

சென்னை (20 ஆக 2020): ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை மூலம் இனி அரசுப் பணியாளர் தேர்வினை நடத்தி நியமனங்கள் செய்யும் புதிய திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப்…

மேலும்...

மத்திய அரசு மீது நடிகர் கார்த்தி சாடல்!

சென்னை (29 ஜூலை 2020): மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விதிகள் 2020’ வரைவுக்கு நடிகர் சிவகுமாரின் இளைய மகனும் நடிகருமான கார்த்தி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல” மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக…

மேலும்...

ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு – மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை (27 ஜூலை 2020): ஓபிசியினருக்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்காததை எதிர்த்து எதிர் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்கள் இன்று தீர்ப்பை வாசித்தனர். அப்போது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்ட…

மேலும்...

2027க்குள் இந்தியாவில் 157 தனியார் ரயில்கள்! – இந்திய ரயில்வே அறிவிப்பு!

புதுடெல்லி (20 ஜூலை 2020): ரயில்வே சேவையில் தனியாருக்கு இடமளிக்கும் வகையில் 157 ரயில் சேவைகள் தனியார்மயமாக்க இருப்பதாக ரயில்வே துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், 2027ம் ஆண்டிற்குள் 157 தனியார் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டில் 12 ரயில்களும், 2024ல் 45 ரயில்களும், 2026ல் 50 ரயில்களும், 2027ம் ஆண்டில் 44 ரயில்களும் என…

மேலும்...

அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? – குமுறும் தமிழர்கள்!

சென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது….

மேலும்...

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் – மத்திய அரசு அதிரடி!

புதுடெல்லி (15 ஏப் 2020): பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில்,…

மேலும்...

மத்திய அரசின் திறமையின்மையால் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – ப.சிதம்பரம் பாய்ச்சல்!

சென்னை (07 மார்ச் 2020): நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்தப் பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு…

மேலும்...

பி.எஸ்.என்.எல் மூடலா? – மத்திய அரசு விளக்கம்!

புதுடெல்லி (06 பிப் 2020): பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் மூடப்படாது என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைசசர், “பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட்’ மற்றும் எம்.டி.என்.எல்., எனப்படும், ‘மஹாநகர் டெலிபோன் நிகாம் லிமிடட்’, ஆகிய நிறுவனங்களை மூடமாட்டோம். அவற்றை வலுப்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும், மத்திய அரசு எடுத்து வருகிறது. அந்நிறுவனங்களின் நிலங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும்,…

மேலும்...