ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனுமதிக்க மாட்டார்: மஹுவா மொய்த்ரா!

கொல்கத்தா(24 ஜன 2021): “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்போது இருந்தால் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட அனுமதித்திருக்க மாட்டார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்தாரா தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளான நேற்று கொல்கத்தாவில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ‘பரக்ரம் திவாஸ்’ விழாவில் கூட்டத்தின் போது பாஜக ஆர்வலர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதை அடுத்து கோபத்தில் மம்தா பானர்ஜி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த விழாவில்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...

மேற்கு வங்கத்தை குஜராத் ஆக மாற்ற அனுமதிக்க முடியாது – மம்தா பானர்ஜி!

கொல்கத்தா (24 டிச 2020): மேற்கு வங்கத்தை குஜராத்தாக மாற்ற யாரும் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும் பாஜக மீது கடுமையாக சாடிய மம்தா  “நாங்கள் எங்கள் மண்ணை மதிக்கிறோம். அதைப் பாதுகாப்பது எங்கள் கடமை.  குஜராத் ஆக  மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று மம்தா பானர்ஜி கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற வாரம் மேற்கு வங்கம்  வந்தபோது திரிணாமுல் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான…

மேலும்...

மேற்கு வங்க அரசியலில் தன் சித்து வேலையை தொடங்கிய பாஜக – திரிணாமுல் காங்கிரஸில் விரிசல்!

கொல்கத்தா (17 டிச 2020): திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுவேந்து ஆதிகாரி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்னர் சுவேந்து ஆதிகாரி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாம் செய்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. சுவேந்து ஆதிகாரி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், புருலியா, பாங்குரா மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகிய பகுதிகளின் பொறுப்பாளராகவும் , மேலும் அந்த…

மேலும்...

பாஜக மம்தாவை கொலை செய்ய முயற்சி – அமைச்சர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (13 டிச 2020): தேர்தலில் தோல்வியை சந்தித்தால் பாஜகவினர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக சதி என்றும் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சுப்ரதா முகர்ஜி கூறினார். கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக…

மேலும்...
Mamta-Banerjee

மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் பிறந்த நிலம், பாஜகவுக்கு இடமில்லை – மம்தா பானர்ஜி தாக்கு!

கொல்கத்தா (27 நவ 2020): மேற்கு வங்கம் நாசருல் இஸ்லாம் ரவீந்திர நாத் தாகூர் போன்றோர் பிறந்த நிலம், மதவாத சக்தியான பாஜகவுக்கு இங்கு இடமில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாசருல் இஸ்லாம் மற்றும் ரவீந்திரநாத் தாகூரின் நிலம். குஜராத் வகுப்புவாத கலவரங்கள் நடக்கும் நாடு அல்ல. மம்தா மேலும் கூறினார் பாஜக ஒரு வெளி கட்சி என்றும், வெளியாட்களுக்கு வங்காளத்திற்கு இடமில்லை மேற்கு…

மேலும்...
Mamta-Banerjee

எல்லை மீறுகின்றதா,பா.ஜ.க-வின் வெறுப்பு பிரச்சாரம்..?!

கொல்கத்தா (செப். 10,2020): பா.ஜ.க.-வின் மேற்கு வங்க துணை செயலாளரான அர்ஜூன் சிங் செப்டம்பர் 1 அன்று ஒரு ட்வீட் செய்துள்ளார் அதில் அவர் ; தீதியின் (மம்தா பானர்ஜி) அரசியலின் ஜிஹாதி இயல்பு, இப்போது இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும் அழிப்பதில் நரகமாக உள்ளது.  மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் ஒரு மதக் குழு ஒரு கோவிலைத் தாக்கி அழித்து மா காலியின் சிலையை எவ்வாறு எரித்தது என்பதைப் பாருங்கள். என்று எரிந்த நிலையிலுள்ள காலியின்…

மேலும்...

கொரோனாவும் அரசு வேலையும் – மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு!

கொல்கத்தா (15 ஜூலை 2020): கொரோனா பாதிப்புக்கு எதிரான பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். . இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்கத்திலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வாரியர் கிளப் ஒன்றை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த கிளப்பில்,…

மேலும்...

எங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

கொல்கத்தா (27 மே 2020): மேற்கு வங்க அரசிடம் தெரிவிக்காமல் 36 இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய…

மேலும்...

மேற்கு வங்கத்தை உலுக்கிய உம்பன் புயல் – 72 பேர் பலி!

கொல்கத்தா (22 மே 2020): மேற்கு வங்கத்தைல் உம்பல் புயல் பாதிப்பால் 72 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் உருவான அதி உச்ச உயர் தீவிரப் புயலான உம்பன், நேற்று மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவை ஒட்டியுள்ள சுந்தரவனக் காடுகள் இடையே கரையைக் கடந்தது. அப்போது கொல்கத்தாவில் மணிக்கு 190 கிலோ மீட்டர் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்ததது. இதனால் சாலையோரம் இருந்த மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன….

மேலும்...