பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலி!

தெஹ்ரான் (22 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் ஈரானில் ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,069 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,594 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஈரானில் கொனா பாதிப்பால் இன்று ஒரே நாளில்…

மேலும்...

கொரோனா வைரஸால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மரணம்!

வாஷிங்டன் (22 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அதி வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ…

மேலும்...

கொரோனாவுக்கு இந்தியாவில் ஐந்தாவது மரணம்!

புதுடெல்லி (20 மார்ச் 2020): கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய ‘கொரோனா வைரஸ்’ தற்போதைய சூல்நிலையில் உலகையே உலுக்கி வருகிறது. உலகில் மொத்தம் 176 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் இந்த நோயினால் இதுவரை 190 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கு வெள்ளிக்கிழமை காலை வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்ப்பூரில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் இந்த நோய்க்கு உயிரிழந்ததன் மூலம் கொரோனாவுக்கு இந்தியாவில் பலி…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 1135 ஆக உயர்வு!

தெஹ்ரான் (18 மார்ச் 2020): சீனா, இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பு ஈரானில் அதிக அளவில் உள்ளன. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1135 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19,361 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 147 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும்...

கணவர் திடீர் மரணம் – மனைவிக்கு தெரியாமல் ஒரே விமானத்தில் பயணித்த கணவரின் உடலும் மனைவியும்!

கண்ணூர் (17 மார்ச் 2020): ஓமனில் கணவர் திடீரென மரணம் அடைந்துவிட அங்கிருந்த மனைவிக்கு கணவர் இறந்ததை கூறாமல் ஒரே விமானத்தில் கணவரின் உடலையும் மனைவியையும் நண்பர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஜாகீர் (30). இவர் 6 வருடங்களாக ஓமனில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின் ஷிபானாவை ஓமனுக்கே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே, ஜாகீர்…

மேலும்...

கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

மும்பை (17 மார்ச் 2020): கொரோனா பாதித்தவர்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 3 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 100 ஐக் கடந்துள்ளது. மும்பை மருத்துவமனையில் 64 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். உலக நாடுகள் பலவற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறை எட்டியதும் வைரஸ் பரவல் மிக வேகமாகக் கூடத் தொடங்கியுள்ளது. அந்த நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த மிகவும் கடினமாகப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்தியா இதுவரை சிறப்பாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது. முதல்…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஸ்பெயினில் ஒரே நாளில் 100 பேர் மரணம்!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு, நோயின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது. ஐரோப்பாவில், இத்தாலிக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7,753 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயியினில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

கொரோனா சந்தேகம் – அருகில் இருந்தும் இறந்த தந்தையின் உடலைபார்க்க முடியாமல் போன மகன்!

திருவனந்தபுரம் (15 மார்ச் 2020): கேரளாவில் இளைஞர் ஒருவர் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இறந்த அவரது தந்தையின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர், கடந்த 8 ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் லினோ அபெல்,…

மேலும்...