கொரோனா வைரஸ் – இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் மரணம்!

ரோம் (14 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில் 24 மணி நேரத்தில் 250 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சீனாவை அடுத்து இத்தாலியை அதிகம் தாக்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் இத்தாலியில் 250 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1266 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை கணக்குப்படி கொரோனாவால் இத்தாலியில் 17660 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...

கொரோனா வைரஸுக்கு இந்தியாவில் இரண்டாவது மரணம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் மேலும் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஏற்கெனவே, கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்காகத் டெல்லியில் சிகிச்சை பெற்றுவந்த 69 வயதான ஒரு பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது இரண்டாக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டுமே பரவி வந்த கரோனா வைரஸ், தற்போது நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தீவிரமாகப் பரவி…

மேலும்...

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் திடீர் மரணம்!

கோட்டயம் (13 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் கேரளாவில்தான் முதலில் பரவியது. அந்த வகையில் தற்போது கேரளாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது இப்படியிருக்க கோட்டயத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென மரணம் அடைந்துள்ளார்….

மேலும்...

கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் மரணம்!

பெங்களூரு (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் மொஹம்மது ஹூசைன் சித்திக் சிகிச்சைப் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த மொஹம்மது ஹூசைன், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவரது சளி மாதிரி பெங்களூருவில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தெலங்கானா அரசும் உறுதி செய்துள்ளது….

மேலும்...

திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார். மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி…

மேலும்...

பேராசிரியர் க.அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்!

சென்னை (07 மார்ச் 2020): மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம்…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர்  பேராசிரியர் க. அன்பழகன் இன்று (6-3-2020) நலக்குறைவால் காலமானார். க. அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அது பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மரணமடந்தார். அவருக்கு வயது 98.

மேலும்...

ஈரானில் 3500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – 107 பேர் பலி!

தெஹ்ரான் (06 மார்ச் 2020): ஈரனில் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 107 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடான…

மேலும்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு 6 பேர் பலி!

வாஷிங்டன் (03 மார்ச் 2020): அமெரிக்காவின் வாஷிங்டனில் கொரோனா வைரஸுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நான்கு பேர் உயிரிழந்ததாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி…

மேலும்...

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒருவர் பலி!

வாஷிங்டன் (01 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த வைரஸ், அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில், நேற்று வரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஈரானையும் இந்த வைரஸ் அதிக…

மேலும்...