முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

காவல்துறை காவலில் 18 வயது முஸ்லீம் சிறுவன் மர்ம மரணம்!

புதுடெல்லி (19 பிப் 2022): டெல்லியில் காவல்துறை காவலில் இருந்த 18 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பழுதுபார்ப்பவராக இருந்த 18 வயது சிறுவன் ஜீஷன் மாலிக் ப்ரீத், விஹாரின் குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். இவர் நவம்பர் 20, 2021 அன்று சிகரெட் பாக்கெட்டைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நிலையில் பிப்ரவரி 14 அன்று காவல்துறை காவலில் மாலிக் உயிரிழந்துள்ளார். கடந்த பிப்ரவரி 14 அன்று சிறுவன் ஜீஷன் மாலிக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக…

மேலும்...

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் துணை முதல்வர் – உவைசி!

லக்னோ (30 ஜன 2022): உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சியை தாக்கி பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, யார் பெரிய இந்து கட்சி என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது என்று கூறினார். ANI இடம் பேசிய ஒவைசி, “யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே யார் பெரிய இந்து என்பதில் சண்டை நடக்கிறது. இருவரும் பெரிய இந்துவாக மாறுவதற்கு போட்டி போடுகிறார்கள். ஒருவர் ஒரு…

மேலும்...

பாஜக சார்பில் 20 முஸ்லிம் வேட்பாளர்கள் – சூடுபிடிக்கும் உ.பி தேர்தல் களம்!

லக்னோ (11 ஜன 2022): உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 20 முஸ்லிம் வேட்பாளர்களையாவது நிறுத்த வேண்டும் என்று பாஜக மத்திய தலைமையிடம் சிறுபான்மை மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது. 2017 தேர்தலில் அக்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. “முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் இருக்கும் பல தொகுதிகள் உள்ளன. பல இடங்களில் நாங்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். சம்பல், மொராதாபாத் மற்றும் மீரட் போன்ற தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்,” என்று…

மேலும்...

முஸ்லீம் பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற ராஜேஷ் என்பவர் கைது!

திருவனந்தபுரம் (21 டிச 2021): பாஸ்போர்ட்டில் மோசடி செய்து 10 ஆண்டுகளாக முஸ்லீம் அடையாளத்துடன் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்த ராஜேஷ் (47) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார் . ஷெரின் அப்துல் சலாம் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேஷ் கடந்த 2006-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாடு சென்றதாக கிளிமானூர் காவல் நிலையத்தில் 2019 இல் வழக்குப்…

மேலும்...

முஸ்லீம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக ஆலோசனை!

புதுடெல்லி (24 அக் 2021): ஐந்து மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி முஸ்லிம்களை எப்படி அணுகுவது என்பது குறித்து பாஜக சிறுபான்மை பிரிவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னால் உள்ள அரசியல் வியூகம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை, குறிப்பாக நாட்டில் உள்ள முஸ்லீம் மக்களை எப்படி அணுகுவது என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர், அனைத்து…

மேலும்...

31 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கும் பாஜக!

பருச் (12 பிப் 2021): குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை வழங்கியுள்ளது. பருச் மாவட்டத்தில், பாஜக 31 வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இவர்களில் 17 பெண்கள் அடங்குவர். இந்த மாவட்டத்தில் முதல் தடவையாக பாஜக பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை பருச் மாவட்ட பாஜக தலைவர் மாருதி சிங் அடோதரியா தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தற்போது காங்கிரஸ் கையில் உள்ளது இது இப்படியிருக்க ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM…

மேலும்...

தாடி வளர்த்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தாடி வளர்த்ததற்காக முஸ்லிம் போலீஸ் அதிகாரி இந்திஸார் அலி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆடைக் குறியீட்டை மீறியதாகவும், தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தாடியை வளர்த்ததாகவும் ஒரு இந்திஸார் அளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்லா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரான இவர்,, கடந்த ஒரு வருடமாக தாடியை வளர்ப்பதற்கான அனுமதி கோரியிருந்தார் ஆனால் அதற்கான எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தாடி வளர்த்தபோதும் அவருக்கு எச்சரிக்கை…

மேலும்...

இறந்த இந்து கொரோனா நோயாளிகளை இந்து முறைப்படி அடக்கம் செய்யும் முஸ்லிம் தன்னார்வலர்கள்!

புதுச்சேரி (15 ஜூன் 2020): இறந்த இந்து கொரோனா நோயாளியை இந்து முறைப்படி அடக்கம் செய்து தங்களையும் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். முஸ்லிம் தன்னார்வலர்கள். புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களை சரிவர அடக்கம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதற்காக சில ஆதாரங்களையும் காண முடிந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகள் யாரானாலும் அவர்களை அவரவர்களின் மத வழக்கப்படி இறுதி சடங்கு செய்ய முன் வந்தனர் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். இதற்காக அவர்களுக்கு அனுமதி கடிதத்தையும்…

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்!

பாட்னா (06 ஜூன் 2020): ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில…

மேலும்...