மதம் மாற்றிய குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் கைது!

புதுடெல்லி (22 ஜூன் 2021): இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முஸ்லிம் மதகுரு இருவரை டெல்லியில் உ.பி. போலீசார் சர்ச்சைக்குரிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்துள்ளனர் கைதான முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம் காசிமி, 52, மற்றும் உமர், 57, ஆகியோரால் நடத்தப்படும் இஸ்லாமிய தாவா மையத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் உமர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிற்கு மாறியவர். பணம்,…

மேலும்...

முஸ்லிம்களுக்கு மசூதி எழுப்பும் இந்துக்களும், சீக்கியர்களும் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

மோகா (16 ஜூன் 2021): பஞ்சாபில் இந்துக்களும், சீக்கியர்களும் இணைந்து முஸ்லிம்களுக்காக மசூதி கட்ட அடிக்கல் நாட்டினர். பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களும் சீக்கியர்களும் ஒன்றிணைந்து அங்கு வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்காக மசூதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். ஞாயிற்றுக்கிழமை காலை இதற்காக நடந்த நிகழ்ச்சியில் அணைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முஸ்லிம்கள் நினைத்தனர். ஆனால் இந்துக்களும்,சீக்கியர்களும் குருத்வாராவின் வாயில்களைத் திறந்து…

மேலும்...

உதவி செய்வதாகக் கூறி கடத்திச்சென்று முஸ்லீம் வயோதிகர் மீது கொடூர தாக்குதல்!

காஜியாபாத் (14 ஜூன் 2021): உத்திர பிரதேசத்தில் மசூதிக்கு சென்ற முஸ்லீம் வயோதிகரை மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறி இந்து இளைஞர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் அப்துல் சமத் சைஃபி என்ற வயோதிகர் தொழுகைக்காக மசூதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் மசூதிக்கு அழைத்து செல்வதாகக் கூறிய கடத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள வனப்பகுதியில் உள்ள ஒரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது, அங்கு இருந்த ஒரு குழு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘வந்தே மாதரம்’…

மேலும்...

மதம் மாறி திருமணம் செய்து கொண்டால் 10 ஆண்டுகள் சிறை!

போபால் (26 நவ 2020): மதம் மாறி திருமணம் செய்துகொண்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு சட்ட மசோதா கொண்டுவந்துள்ளது. லவ் ஜிஹாத்தை தடுக்கும் நடவடிக்கையாக இந்த மசோதாவை மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்துகிறது இந்த மசோதாவின் கீழ், மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி மதம் மாறியவர்கள் திருமணம் செய்வது தண்டனைக்குரியது. இந்த மசோதா டிசம்பர் 28 ம் தேதி சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை…

மேலும்...

பீகாரில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத ஆளுங்கட்சி!

பாட்னா (17 நவ 2020): பீகாரில் முதல் முறையாக, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பீகார் என் டி ஏ கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி), ஜனதா தளம் (யுனைடெட்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மதச்சார்பற்ற மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளன. இவை 11 முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும், அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை . கூட்டணியில் முஸ்லீம் எம்.எல்.ஏ…

மேலும்...

திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29 அன்று இந்துவாக மதம் மாறினார். இவருக்கும் இந்து ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து வழக்கப்படி ஜூலை 31 அன்று நடந்தது. இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு பெண் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த திபதி மகேஷ் சந்திர திரிபாதி, மதமாற்றம் திருமணத்திற்காக மட்டுமே…

மேலும்...

இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய தமுமுகவினர்!

திருப்பூர் (19 மே 2020): திருப்பூரில் மாமனாரால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிமாறனை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை வெட்டிய மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியை சேர்த்தவர் மணிமாறன். இவர் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் மணிமாறனுக்கும் அவரது…

மேலும்...