பாஜக அரசு அடிமை அரசாகிவிட்டது – சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (17 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்காக, மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இதுகுறித்து வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால், குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ட்ரம்ப் வருகையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை, புதிதாகக் கட்டப்படும் சுவருக்குப்…

மேலும்...

மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை – கவிஞர் ஜாவெத் அக்தார்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை. என்று பிரபல கவிஞர் ஜாவெத் அக்தார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஜாவெத் அக்தார், இயக்குநர் மகேஷ் பட் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் ஜாவெத் அக்தார் மோடி பாசிஸ்டு என்பதை ஆணித்தரமாக கூறினார். மேலும் மோடியின் கூட்டத்தாரின் தலையில் கொம்பு முளைத்துவிடவில்லை. அவர்கள்தான் சிறந்தவர்கள் என்பது போலவும் மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் என்பது போலவும் நினைக்கிறார்கள். இதுவே பாஸிஸ்டு என்பதற்கு அடையாளம். மேலும் மக்கள்…

மேலும்...

பிரதமர் மோடியின் ஒரு நாள் செலவு ₹ 1.62 கோடி!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் ஒரு நாள் செலவு ₹ 1.62 கோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.592.55 கோடி அடிப்படையில் பார்த்தால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ.11, 263 செலவிடப்படுகிறது. இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூா்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு…

மேலும்...

மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...

மக்களுக்கு மன் கி பாத் தேவையில்லை – மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை (11 பிப் 2020): மக்களுக்கு ‘மன் கி பாத் தேவையில்லை, ஜான் கி பாத் தான் அவசியம்’ என்று டெல்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்தில், ‘டெல்லி…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை!

புதுடெல்லி (11 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் பயணமாக பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளளார். அவரது வருகையை வெள்ளை மாளிகை திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ஜனவரி 16ஆம் தேதி…

மேலும்...

கொரோனாவை எதிர்கொள்ள சீனாவுக்கு உதவ தயார்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (09 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி சீன அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: , கொரோனா வைரஸ் சவாலை எதிர்கொள்ள சீனாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்த வைரசால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஹூபெய் மாகாணத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்கு சீன அரசு செய்த…

மேலும்...

மாநிலங்களவையை கிடுகிடுக்க வைத்த விப்லவ் தாக்கூர்!

புதுடெல்லி (08 பிப் 2020): விப்லவ் தாக்கூர் இவர்தான் இன்று இணையஙகளை கலக்கிக் கொண்டிருப்பவர். 76 வயதான இந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர். 1943 அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் பிறந்தார். அரசியலில் முதுகலை வரை படித்துள்ளார். இவரது பெற்றோர் சுதந்திரப் போராட்ட வீரர்கள். 1985 முதல் இமாச்சல் மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல முக்கிய பதவிகளை இவர் வகித்து வந்திருக்கிறார். இவர் மாநிலங்களவை பேசிய அனல் கக்கும்…

மேலும்...

பொய் செய்தியை வைத்து உமர் அப்துல்லா மீது பழி சுமத்திய மோடி – சீதாராம் யெச்சூரி பகீர் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): இணையத்தில் வந்த பொய் தகவலை வைத்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது பிரதமர் மோடி பழி சுமத்தியுள்ளார் என்று சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளித்த பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் 2 முன்னாள் முதல்வர்கள் மீது குற்றம் சுமத்தினார். , மேலும் உமர் அப்துல்லா கூறியதாக மேற்கோள் காட்டிய கூற்றில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு…

மேலும்...

பிரதமர் என்ற அந்தஸ்தை இழந்துவிட்டார் – மோடிக்கு ராகுல் பதிலடி!

புதுடெல்லி (07 பிப் 2020): ஒரு பிரதமர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமது பிரதமருக்கு தெரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியை மறைமுகமாக டியூப் லைட் என்று விமரிசித்திருந்தார். இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு ராகுல் காந்தி தெரிவித்ததாவது: பொதுவாகவே பிரதமர் என்றால் அவர்களுக்கு என ஒரு தனி அந்தஸ்து இருக்கும். பிரதமர் என்றால் அவர்கள் நடந்து…

மேலும்...