நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும்…

மேலும்...

கொரோனா – தனிமைப் படுத்தப்பட்ட நடிகர் ரஜினி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐதராபாத் (23 டிச 2020): நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட நிலையில் அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக…

மேலும்...

கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை – ரஜினியின் தலைசுற்றல் நடவடிக்கை!

சென்னை (21 டிச 2020): மாற்று கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாக கூறி இன்னும் தொடங்காத ரஜினி கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல இழுபறிகளுக்கு இடையே சற்று குழப்பமான சூழ்நிலையில் ஜனவரி மாதம் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அது குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரஜினி கட்சியின் பல மாவட்டச் செயலாளர்கள் 22 பேர் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு…

மேலும்...

ரஜினியை விடாது துரத்தும் வாடகை பாக்கி விவகாரம் – உயர் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்!

சென்னை (16 டிச 2020): நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா செயலாளராக இருந்து நிர்வகித்து வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை பாக்கி விவகாரத்தில், அந்தப் பள்ளியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் காலி செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திரா கல்விச் சங்கம் சென்னை கிண்டி பகுதியில் ஆஸ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறது. வெங்கடேஸ்வரலு, பூர்ணச்சந்திர ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இந்த இடத்துக்கு இந்த சங்கம் வாடகை பாக்கி செலுத்தவில்லை என்பது குற்றச்சாட்டு….

மேலும்...

ஆவலோடு இருந்து ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர்கள்!

சென்னை (12 டிச 2020): ரஜினி வீட்டின் வாசலில் காத்திருந்து ரஜினி வீட்டில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். நடிகர் ரஜினிக்கு இன்று 70 வது பிறந்தநாள். ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. ரஜினிகாத்துக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் ரஜினி…

மேலும்...

ரஜினி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சென்னை (17 அக் 2020): ராகவேந்திரா திருமண மண்டப சொத்துவரி குறித்த வழக்கை திரும்ப பெறுவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ.6.50 லட்சம் சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி கோரியுள்ளது. இந்நிலையில் ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு ரூ.6.5 லட்சம் சொத்துவரி செலுத்த கூறிய நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு…

மேலும்...

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்கவேண்டும் – திமுகவினர் ஆர்வம்!

சென்னை (15 அக் 2020): ரஜினி தேர்தலுக்கு முன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று திமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளுமே தயாராகிவிட்டன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. சசிகலா விடுதலையானால், என்ன நடக்கும் என்ற பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியல் கட்சியை தொடங்கி…

மேலும்...

ஆதரவு ரஜினிக்கு..! சேர்ந்தது பா.ஜ.க-வில்!.!

சென்னை (25 ஆக 2020): ரஜினி ஆதரவாளரான முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, பாஜகவில் இணைந்தார். தமிழ்நாட்டின் கரூரில் இருந்து வந்த முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி, பெங்களூரு தெற்கில் துணை போலீஸ் கமிஷனராகவும், உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார். பல ஆண்டுகளாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பின்னர், 2019 ல் நெருங்கிய நண்பர் இறந்ததைத் தொடர்ந்து குப்புசாமி தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் அவர் தனது சொந்த…

மேலும்...

மோடியின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? – ரஜினிக்கு ஜோதிமணி சரமாரி கேள்வி!

சென்னை (23 ஜூலை 2020): “ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து வாய் திறக்காதது ஏன்?” என்று ரஜினிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவிற்கு இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப்…

மேலும்...

கந்தசஷ்டி கவசம் – நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட்!

சென்னை (22 ஜூலை 2020): கந்தசஷ்டி கவசம் மற்றும் கறுப்பர் கூட்டம் யூடுப் சேனல் குறித்து நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட் வெளியிட்டுள்ளார். எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் திடீர் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப்…

மேலும்...