ரஜினிகாந்த் கட்சி எப்போது ? – தியாகராஜன் ஆரூடம்

சென்னை (15 ஜூலை 2020): நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என அவரது நண்பர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ரஜினி நற்பணி மன்றங்கள் பல கோடிக்கணக்கான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கட்சி ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிபார் என செய்திகள் வெளியாகின. தற்போது நவம்பரில் கட்சி ஆரம்பிக்கப்படும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தாலும் அது எந்த வருட நவம்பர் என அவர் குறிப்பிடவில்லை.

மேலும்...

சத்தியமா விடவே கூடாது – ரஜினி கிளப்பிய பரபரப்பு!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினி திடீரென குரல் கொடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிற மாநில சினிமா நட்சத்திரங்களெல்லாம் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றனர். ஆனால் நடிகர் ரஜினி வாய்திறக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே…

மேலும்...

டாஸ்மாக் விவகாரம் – நடிகர் ரஜினிகாந்த அதிர்ச்சி கருத்து!

சென்னை (10 மே 2020): டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க முற்பட்டால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு…

மேலும்...

கொரோனா வைரஸ் – ராகவேந்திரா மண்டபம் குறித்து ரஜினி கூறியது என்ன?

சென்னை (04 மே 2020): சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு தரமுடியாது என்று கூறியதாக வெளியான தகவலுக்கு ரஜினி விளக்கம் அளித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணியால் மண்டபத்தை தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார்,…

மேலும்...

மெழுகு வர்த்தியுடன் வீதிக்கு வந்த ரஜினி!

சென்னை ( 05 ஏப் 2020): உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்று…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்த ரஜினி!

சென்னை (17 மார்ச் 2020): சென்னையில் விழா ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். எனினும் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…

மேலும்...

இதைவிடவா எழுச்சி வேண்டும்? -ரஜினிக்கு மன்சூர் அலிகான் கேள்வி!

சென்னை (14 மார்ச் 2020): தமிழகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சி போதாதா? என்று நடிகர் மன்சூர் அலிகான் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த தனது நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது எழுச்சி ஏற்பட்டால் அரசியல் கட்சி தொடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து நடிகர் மன்சூர்அலிகான் தெரிவிக்கையில், “தமிழ்நாட்டில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் போராடியது எழுச்சியாகத் தெரியவில்லையா? மீத்தேன், ஹைட்ரோகார்பனை எதிர்த்து…

மேலும்...

கொரோனா வந்தாலும் பாசிசம் தமிழகத்தில் வரவே முடியாது – நாஞ்சில் சம்பத் அதிரடி!

சென்னை (13 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வந்தாலும் பாசிசம் வரவே முடியாது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ரஜினி நேற்று கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவரது பேட்டி புஸ்வானமானது. அனைத்து செய்தியாளர்களையும் அழைத்து ஏதேதோ சொல்லி, அவரிடம் எதிர்பார்த்த கட்சி தொடர்பான அறிவிப்பு கடைசி வரை வரவேயில்லை. இந்நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து நாஞ்சில் சம்பத் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: “கொரோனா வைரஸ் வந்தாலும் தமிழகத்தில் ஃபாசிச வைரஸ் வராது….

மேலும்...

எனக்கு பதவி வேண்டாம் ஆனால் கட்சி வேண்டும் – மீண்டும் குழப்பிய ரஜினி!

சென்னை (12 மார்ச் 2020): முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை, ஆனால் கட்சியை தொடங்கி அதன் மூலம் ஒருவரை பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவரது ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சுமார் 1 கோடி தொண்டர்களை இலக்கு வைத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்தது. இதற்கிடையே அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி புதிய கட்சி தொடங்காமல் இருப்பது அவரது…

மேலும்...

அரசியலுக்கு வருவதாக நான் சொல்லவே இல்லை – ரஜினி விளக்கம்!

சென்னை (12 மார்ச் 2020): நான் 2017 க்கு முன்பு அரசியலுக்கு வருவதாக சொல்லவே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “25 வருடமாகவே அரசியலுக்கு வருவதாக என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் அப்படி எப்போதுமே சொல்லவில்லை. எதுவானாலும் அவன் கையில் உள்ளது என்று மட்டுமே கூறியுள்ளேன். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு,…

மேலும்...