கத்தாரிலிருந்து இந்தியா: எட்டு விமானங்கள் புறப்பாடு!

கத்தார் (13 மே 2020): சர்வதேச அளவில் வசிக்கும் இந்தியர்கள், நாடு திரும்ப இந்தியா உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான திட்டத்தை, வந்தே பாரத் மிஷன் (#VandeBharatMission) என்ற பெயரில் மத்திய அரசு வகுத்துள்ளது. கத்தாரிலிருந்து இந்தியா செல்ல விரும்புவோர், இந்தியத் தூதரகத்திற்கான இணைய தளத்தில் பதிவு செய்ய, தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் இதுவரை 44 ஆயிரம் பேர் பதிவு…

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு – துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை!

துபாய் (02 மே 2020): சமூக வலைதளங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீப காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகள் அதிகரித்தபடி உள்ளன. இது வளைகுடாவில் பணிபுரிந்து வரும் இந்துத்வா கொள்கையளர்களிடம் அதிகம் காணப்படுகின்றன. முன்பெல்லாம் இது அதிக கவனம் பெறாத நிலையில் இவ்விவகாரம் தற்போது வளைகுடாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்காக வளைகுடாவில் பலரும் சட்டப்படியான நடவடிக்கைகளை…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு!

துபாய் (01 மே 2020): ஐக்கிய அரபு அமீரக தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஊதியங்கள் வழங்கப்படுவதை நிறுவன முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினர் முன்…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகள் – துபாய் இந்திய தூதுவர் எச்சரிக்கை!

துபாய் (21 ஏப் 2020): முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் பதிபவர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வளைகுடாவில் வசிக்கும் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள்…

மேலும்...

சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...

கொரோனா வைரஸ் எதிரொலி – ஈரான் அரசு எடுத்த அதிரடி முடிவு!

தெஹ்ரான் (10 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரானில் இருக்கும் சிறைக் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்த நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் ஈரான் நாட்டு அரசு சில அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரான் நாட்டில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் சுமார் 70 ஆயிரம் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு தலைமை…

மேலும்...

ஈரானில் 3500 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – 107 பேர் பலி!

தெஹ்ரான் (06 மார்ச் 2020): ஈரனில் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை 107 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடான…

மேலும்...

பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது. ‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...

கத்தார் தேசிய விளையாட்டு தினம்!

தோஹா (11 பிப் 2020): கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் பிப் 11 செவ்வயன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid…

மேலும்...

கத்தார் நாட்டில் துவங்கியது தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு!

தோஹா (27 ஜன 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டில் வரும் திங்கள் கிழமை (இன்று) முதல் தேசிய முகவரிச் சட்ட கணக்கெடுப்பு துவங்குகிறது. தேசிய முகவரிச் சட்டம் (National Address Law) என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்தப் பதிவேடு மூலம், கத்தர் நாட்டுப் பிரஜைகள் மற்றும் கத்தரில் தங்கியுள்ள வெளிநாட்டவர் அனைவரும் இன்றுமுதல் ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்தாக வேண்டும். இதனை உள்துறை அமைச்சகம் (Ministry of Interior) அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு…

மேலும்...