விவசாயிகள் போராட்டத்தைத் தொடர கூட்டு கிசான் மோர்ச்சா முடிவு!

புதுடெல்லி (04 டிச 2021): மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, விவசாயச் சட்டங்களை ரத்து செய்யும் வாபஸ் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்நிலையில் முக்கிய கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், டெல்லி எல்லையில் முற்றுகையைத் தொடர்வதில் அமைப்புகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தொடர்வது என்றும் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நடந்த விவசாயிகள்…

மேலும்...

வேளாண் சட்டம் மீ ண்டும் கொண்டுவரப்படும் – பாஜக எம்பி சாக்‌ஷி மகாராஜ்!

புதுடெல்லி (22 நவ 2021): சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாஜக எம்பி சாக்ஷி மகராஜ், மீண்டும் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், அவை மீண்டும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். என தெரிவித்தார். மேலும். “மோடிஜியின் பெருந்தன்மைக்கு நான் நன்றி கூறுகிறேன். சட்டத்தின் ஆட்சியை விட தேசத்திற்கு அவர் முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் காலிஸ்தான்…

மேலும்...

வேளாண் சட்டம் ரத்து – மோடியின் வாக்குறுதியை விவசாயிகள் நம்பத் தயாரில்லை – ராகுல் காந்தி!

புதுடெல்லி (21 நவ 2021): பிரதமரின் வார்த்தைகளை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்ததை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த கால அனுபவங்கள் விவசாயிகளை வேலைநிறுத்தத்தைத் தொடரத் தூண்டியுள்ளன. நரேந்திர மோடி முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மக்கள் இன்னும் அவரின் பொய்யான…

மேலும்...

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (21 நவ 2021): விவசாயிகள் போராட்டத்தை, பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் தீர்த்து வைக்க, ஒன்றிய அரசு முயற்சியில் உள்ளது. அடுத்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், விவசாய சட்டத்தை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம். நாளைக்குள் மசோதா தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, கூட்டு கிசான் மோர்ச்சாவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமரின் அறிவிப்பு மற்றும் போராட்ட வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். நாடாளுமன்றத்தில் சட்டத்தை…

மேலும்...

நாடாளுமன்றத்தில் வாபஸ் பெறாமல் போராட்டம் வாபஸ் இல்லை – விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி(21 நவ 2021): வேளாண் சட்டம் திரும்பப் பெற்றபோதிலும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றாமல் போராட்டம் வாபஸ் இல்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு கிசான் மோர்ச்சா (ஜேகேஎம்) இன்று சிங்கில் கூடுகிறது. முன்னதாக நேற்று விவசாயிகள் அமைப்புகளின் கோர் கமிட்டி கூடி டெல்லி எல்லையில் போராட்டம் தொடரும் என அறிவித்தது. லக்னோவில் இன்று நடைபெறும் மகா பஞ்சாயத்து…

மேலும்...

பாஜக தரப்பில் குறையுள்ளது – யோகி ஆதித்யநாத் பகீர் கருத்து!

லக்னோ (19 நவ 2021): பாஜக தரப்பில் சில குறைபாடுகள் காரணமாக வேளாண் சட்டத்தின் உண்மையான நோக்கங்களை விளக்கத் தவறிவிட்டோம். என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை அடுத்து. இந்த முடிவை வரவேற்றுள்ளஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வேளாண் சட்டத்தின் பலன்களை விவசாயிகள் நம்பவில்லை. “விவசாயிகளுடன் அனைத்து மட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளோம். ஆனால் எங்கள் தரப்பில் சில குறைபாடுகள்…

மேலும்...

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் எதிர்ப்பு – போராட்டத்தை தொடர முடிவு!

புதுடெல்லி (13 ஜன 2021): விவசாயிகளின் சட்டங்களை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவை நியமிக்க உச்சநீதிமன்றம் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த குழுவுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் முன்வந்துள்ளன. அவர்கள் குழுவுடன் ஒத்துழைக்க மாட்டார்கள் என்று அமைப்புகளின் கருத்து. சட்டத்தை ஆதரிப்பவர்கள் குழுவில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகவும் விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் உள்ள உழவர் அமைப்புகள் தாங்கள் ஒரு குழு முன் ஆஜராக மாட்டோம்…

மேலும்...

நீங்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் செய்வோம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுடெல்லி (11 ஜன 2021): வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதுகுறித்த விசாரணையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே “பிரச்சினையின் இணக்கமான தீர்வை எங்களால்…

மேலும்...

ஹேப்பி நியூ இயருக்கு பதிலாக விவசாயிகள் இட்ட கோஷம்!

புதுடெல்லி (01 ஜன 2021): விவசாய விரோத சட்டங்களான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் 37வது நாளாக தொடர்கிறது. நேற்று முன் தினம் மத்திய அரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற 6ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதன் காரணமாக சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் நீடிக்கும் என விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 2021ம் ஆண்டு பிறந்ததை அடுத்து நள்ளிரவு 12 மணிக்கு டெல்லியின்…

மேலும்...

முதல்வர் எடப்பாடிக்கு ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை (01 ஜன 2021): மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்து செய்யக் கோரி- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற- தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோருவது- குறித்து முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, நேற்று (31-12-2020) கேரள சட்டமன்றத்திலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க…

மேலும்...