திருமண வீட்டில் முதல்வர் ஸ்டாலின் – வைரலாகும் புகைப்படம்!

சென்னை (27 ஜூன் 2021): இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் இன்று நடைபெற்றது. ரஞ்சி கிரிக்கெட் வீரர் ரோஹித் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் படி, நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இயக்குனர் ஷங்கர் அழைப்பு விடுத்ததின் பேரில், முதல்வர் முக ஸ்டாலினும் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.

மேலும்...

கொத்து கொத்தாக எரியும் சடலங்கள் – வைரலாகும் பரபரப்பு வீடியோ!

காசிப்பூர் (16 மே 2021): உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள்கொத்து கொத்தாக எரிக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள்…

மேலும்...

நடிகர் கமல் மகள் ஸ்ருதியின் வைரல் புகைப்படம்!

சென்னை (13 அக் 2020): நடிகர் கமலின் மகளான ஸ்ருதியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்,கிறார். இவர், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது…

மேலும்...

இந்திய சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் – பரபரப்பு வீடியோ!

லடாக் (13 ஜூன் 2020): இந்திய சீன படையினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சிக்கிமில் இந்திய மற்றும் சீன படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா – சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள்…

மேலும்...

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பெண் பாஜக பிரமுகர் – வைரல் வீடியோ!

புதுடெல்லி (06 ஜூன் 2020): பாஜக பிரமுகரும் டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகத் என்ற பெண் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரியானா மாநிலம் பால சமந்த் மண்டி என்ற இடத்தில் சோனாலி, விவசாயிகள் சிலருடன் பருப்பு வியாபாரத்துக்கு சென்றுள்ளார். அப்போது சுல்தான் சிங் என்ற மார்க்கெட் கமிட்டி அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனாலி, காலணியால் சுல்தானை தாக்கினார். கேலி செய்ததற்காக அடித்ததாக சோனாலியும், தேர்தல்…

மேலும்...

இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதில் மிகவும் அவதிபட்டனர். பலர் கால்நடையாக நடந்தே ஊருக்கு சென்றனர். இதில் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அந்த வகையில் தாமதமாக அரசு அறிவித்த…

மேலும்...

புலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ!

முசாபர்பூர் (27 மே 2020): புலம் பெயர்கையில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்பும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய அரசு…

மேலும்...

தப்லீக் ஜமாஅத் தலைவர் பேசியதாக வைரலான ஆடியோ போலியானது: விசாரணையில் தகவல்!

புதுடெல்லி (09 மே 2020): கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்பதாக டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் காந்தல்வி பேசியதாக வெளியான ஆடியோ போலியானது என விசாரணை முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பு டெல்லியில் கூடிய தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் கலைக்கப்பட்டது. எனினும் கொரோனாவை தப்லீக் ஜமாஅத்தினர்தான் பரப்பினர் என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பரப்பின. மேலும் சமூக ஊடகங்களிலும் போலியான…

மேலும்...

மதுபான கடையில் பிரபல நடிகை – வைரல் வீடியோ!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் மதுபான கடையில் மது வாங்கி வருவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உரடங்கு சமயத்தில் நடிகைகள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைகளில் மது வாங்குவது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானது. இதனை ட்விட்டரில் பகிர்ந்த ரகுல் அது குறித்து பதிலளித்துள்ளார் , “மருந்து கடைகளில் மதுபானம்…

மேலும்...

டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ ட்விட்டரில் உண்மையில் பதிந்தது என்ன?

புதுடெல்லி (15 பிப் 2020): டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ அமானதுல்லா கான் ட்விட்டரில் பதிந்ததாக ஒரு பொய் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷஹின் பாக் பகுதி வேட்பாளர் அமானதுல்லா கான் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டரில், “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்….

மேலும்...