டெல்லி வன்முறையில் உயிரிழந்த 30 பேர் யார்? என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்த 38 பேர் யார் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முபாரக் அலி (35) பெயிண்டிங் வேலை செய்பவர் இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் . முஹம்மது இர்ஃபான் (42) கூலி வேலை செய்பவர். இவருக்கு…

மேலும்...

டெல்லியில் சாக்கடையிலிருந்து மேலும் இரு உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட உடல்கள் பல இடங்களில் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேலும் இரு உடல்கள் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் தற்போதைய தகவல்படி…

மேலும்...

சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக்கில் நடைபெற்ற நெகிழ வைக்கும் நிகழ்ச்சி!

சென்னை (26 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை (ஷஹீன் பாக்) போராட்டக் களத்தில் இந்து பெண் ஒருவருக்கு முஸ்லிம் பெண்கள் சீமந்தம் நடத்தி அழகு பார்த்தனர். குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சிஏஏ வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர கோரியும், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற கோரியும் சென்னை வண்ணாரப்பேடையில் பெண்கள் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சமூகத்தினரும் கலந்து கொண்டு…

மேலும்...
shaheen-bagh

ஷஹீன் பாக் வழக்கை இப்போதைக்கு விசாரிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஷஹீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கை இப்போதைக்கு விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் 70 நாட்களையும் தாண்டி அமைதி வழியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஒரு பக்கம் கலவரம் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஷாகீன் பாக் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் டெல்லியில் நடந்து வரும் கலவரமும் முடிவுக்கு…

மேலும்...

டெல்லி போராட்டக் காரர்களுக்கு பாஜக தலைவர் 3 நாட்கள் கெடு – போலீசுக்கும் எச்சரிக்கை!

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லி ஜாஃப்ராபாத் போராட்டக் காரர்கள் மூன்று நாட்களில் கலைந்து செல்ல வேண்டும் என்று பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கெடு விதித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது. இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000…

மேலும்...

CAA எதிர்ப்பு போராட்டத்தில் மீண்டும் வன்முறை, பதற்றம் – போலீஸ் கண்ணீர் புகை வீச்சு!

புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது. இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000 த்திக்ற்கும் அதிகமான பெண்கள் டெல்லி மஜூபூர் பகுதியில்…

மேலும்...
shaheen-bagh

ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது பழி போட நினைத்து சிக்கிக் கொண்ட போலீஸ்!

புதுடெல்லி (22 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் சாலைகளை ஆக்கிரமித்திருப்பது போராட்டக் காரர்கள் என்று கூறிய போலீஸ் தற்போது அது பொய் என்பது நிரூபிக்கப்பட்டதுள்ளது. குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. அதில் ஷஹின் பாக் போராட்டம் முதன்மையாக கருதப்படுகிறது. டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறத்தியும் ஷஹின் பாக்கில் அமைதி வழியில் தொடர்…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பதாகைகளுடன் புதுமண தம்பதிகள்!

கோவை (21 பிப் 2021): கோவை ஆற்றுப் பாலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் தமிழகத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை ஆற்றுப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் நேற்று (20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் – ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள்…

மேலும்...
shaheen-bagh

போக்குவரத்துக்கு நாங்கள் இடையூறல்ல போலீஸ்தான் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் – (VIDEO)

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் யாரும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை போலீஸ்தான் வழியை அடைத்து வைத்துள்ளது என்று ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம்…

மேலும்...

ஷஹீன் பாக் மாடல் தொடர் போராட்டம் கோவையிலும் தொடங்கியது – வீடியோ!

கோவை (20 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் நாடெங்கும் பரவியுள்ள நிலையில் கோவையிலும் தொடர் போராட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லியைப் போன்று சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்று தொடர் போராட்டத்தில்…

மேலும்...