அழகிரி வீட்டுக்கு வந்த உதயநிதி – ஷாக்கான அழகிரி!

மதுரை (16 ஜன 2023): முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்கு வந்து அழகிரியை சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார். டி.வி.எஸ். நகரில் உள்ள அழகிரி வீட்டில் அழகிரியை சந்தித்த உதயநிதி மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

மேலும்...

மதுரையில் டெபாசிட் இழந்த திமுக!

மதுரை (22 பிப் 2022): மதுரையில் ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளரிடம் திமுக அதிமுக இரு கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்துவருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128…

மேலும்...

திமுகவில் பரபரப்பு – மீண்டும் திமுகவில் இணைந்த அழகிரி!

மதுரை (23 செப் 2020): அழகிரி திமுகவில் மீண்டும் இணைந்துள்ள உறுப்பினர் அட்டை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன். கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர…

மேலும்...

திருமண விழாவில் பிறந்தநாள் – அசரடித்த அழகிரி!

மதுரை (30 ஜன 2020): முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது பிறந்த நாளன்று, மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அவரது ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழகிரியையும், அவரது குடும்பத்தினரையும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்திற்கு அழைத்து வந்து பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள். மு.க.அழகிரி, கேக் வெட்டி, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். விழாவில் கலந்து கொண்டோருக்கு…

மேலும்...