அஸ்ட்ராஜெனெகா மூன்றாவது டோஸுக்கு ஓமிக்ரனை எதிர்க்கும் சக்தி அதிகம் : ஆய்வு!

லண்டன் (13 ஜன 2022): அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸுக்குப் பிறகு கோவிடின் மாறுபாடான ஓமிக்ரானுக்கு எதிராக நல்லமுறையில் செயல்படுவதாக ஆங்கிலோ-ஸ்வீடிஷ் பயோஃபார்மா மேஜர் வெளியிட்ட ஆரம்ப தரவு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசியின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் சோதனையில், மூன்றாவது டோஸாக கொடுக்கப்படும் பூஸ்டர் டோஸ், பீட்டா, டெல்டா, ஆல்பா மற்றும் காமா உள்ளிட்ட கொரோனா வைரசுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவிற்கு ஏற்றுமதியாகும் கொரோனா தடுப்பூசி!

புதுடெல்லி (26 ஜன 2021): சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), சவுதி அரேபியாவுக்கு 3 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா  (AstraZeneca) கோவிட் -19 தடுப்பூசி அளவுகளை பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து கொரோனா தடுப்புசிகளை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளர் சார்பாக கொரோனா தடுப்புசிகளை சவூதி அரேபியாவிற்கு ஒருவாரத்தில் ஏற்றுமதி செய்யப்படும்.” என தன் தலைமை நிர்வாகி திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்….

மேலும்...