சவூதியில் கோவிட் 19 காலத்தில் பெரும் சேவை புரிந்தவர்களுக்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கவுரவிப்பு!

ஜித்தா (20 டிச 2020): சவூதி அரேபியா ஜித்தாவில் கோவிட் 19 காலகட்டத்தில் பெரும் சேவை புரிந்த மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும்  தன்னார்வலர்கள், இந்தியன் சோஷியல் ஃபாரம் சார்பில் கேடயங்கள் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். 19 டிசம்பர் 2020 சனிக்கிழமை மாலை 09 மணிக்கு ஜித்தாவில் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்ட விழாவில் குறிப்பிட்ட அளவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இந்தியன் சோஷியல் ஃபாரம் ஜித்தா பிரிவின் அனைத்து மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

மேலும்...

ரூ. 37 லட்சம் மருத்துவ செலவுக்கு பொறுப்பேற்ற சவூதி நஜ்ரான் கவர்னர் அலுவலகம் – உதவிய இந்தியன் சோஷியல் ஃபோரம்!

ஜித்தா (10 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரத்தின் முயற்சியால் ஏழு மாதக் குழந்தையின் மருத்துவச்செலவு 37 இலட்சம் ருபாய்க்கு பொறுப்பேற்றது சவூதி அரேபியா-நஜ்ரான் கவர்னர் அலுவலகம். கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தை சார்ந்தவர் ஜோஸ்பின் இவர் சவூதி அரேபியா நஜ்ரானில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகின்றார் ஜோஸ்பின் அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது இக்குழந்தை பிரசவ காலம் முழுமையடையாமல் 7 மாதத்திலே பிறந்துள்ளது. • குழந்தைக்கு…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்!

ஜித்தா (02 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) ஜித்தா பிரிவு சாத்தான்குள சம்பவத்திற்கான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த வியாபாரிகள் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியன் சோசியல் ஃபோரம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஜுன் 20, வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு, பொது ஊரடங்கின் போது இரவு 9மணிக்கு மேல்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்!

ஜித்தா (28 மே 2020): கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பல்லடத்தைச் சார்ந்த தமிழர் (வயது 53), 23-5-2020 அன்று சிகிச்சை பலனின்றி சவுதி அரேபியா, ஜித்தாவில் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ஜித்தா தமிழ் மாநில நிர்வாகிகள் ஊரடங்கின் போதும் முன்னின்று செய்தனர். இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்பித்து குறுகிய நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கான…

மேலும்...