துபாய் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

துபாய் (27 ஜூலை 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு 17 வகையான வழிமுறைகளை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழிலாளர் சட்டம் குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் இந்தியர்கள் அனைவருக்கும் அவசரத் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். பணியிடத்தில் மன மற்றும்…

மேலும்...

குவைத் இந்திய தூதரகம் மூடல்!

குவைத் (26 ஜூன் 2021): ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூதரக செயல்பாடுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை, அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தூதரக சேவைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்...

ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு!

ஜித்தா (29 மே 2020): ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் இயங்கும் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்திய தூதரகம் தொடர்பான பணிகள் (அவசர தேவைகள் தவிர) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரங்கு படிப்படியாக குறைக்கப்படவுள்ள நிலையில், இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான ஜித்தா ஹைல் சாலை VFS Global அலுவலகம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் இயங்கும். மேலும்…

மேலும்...

ஜித்தா இந்திய தூதரகத்தில் நடந்த குடியரசு தினம்!

ஜித்தா (28 ஜன 2020): ஜித்தா இந்திய தூதரகத்தில் கடந்த 26 ஆம் தேதி இந்திய குடியரசு தின கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சவூதி வெளியுறவுத்துறை அதிகாரி ஹானி காஷிஃப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தவர்களும் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய கன்சுல் ஜெனரல் பேசுகையில், இந்தியா சவூதி அரேபியா இடையேயான உறவுகள் குறித்தும், மெக்கா வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு கொடுக்கும் மதிப்பு வாய்ந்த உபசரிப்புகள் குறித்தும் வாழ்த்தி…

மேலும்...