வந்தார் ஓபிஎஸ் வராத ஈபிஎஸ்!

சென்னை (17 அக் 2022): சட்டபேரவை கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் என்ன முடிவெடுப்பார்…

மேலும்...

ஓபிஎஸ் தனது இல்லத்தில் தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

சென்னை (02 அக் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர…

மேலும்...

மீண்டும் எடப்பாடி ஓபிஎஸ் யுத்தம் – மதுரை போஸ்டர்களால் பரபரப்பு!

மதுரை (09 செப் 2020): மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அதிமுகவில் மீண்டும் எடப்பாடி, ஓபிஎஸ் யுத்தம் தொடங்கியுள்ளது. மதுரையில் ராஜேந்திர பாலாஜியின் படத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் “மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்”- எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பிறகாவது திருந்தட்டும் என்று மதுரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் “அரசியலில் முதிர்ச்சி” “அதிகாரத்தில் அடக்கம்” “என்றென்றும் தமிழர் தலைவர் ஓபிஎஸ் வழியில்” என்று…

மேலும்...