வேளாண் சட்டங்களுக்குத் தடை – விவசாயிகள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா?

மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி டெல்லியில் கடந்த 49 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தினிடையே 50 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. டெல்லியினுள் போராட்டக்காரர்கள் புகுந்துவிடாமல் இருக்க, டெல்லியின் நுழைவாயில் சாலைகள் அனைத்தும் காவல்துறையினரால் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும் அசராமல் விவசாயிகள் கடுமையான குளிரிலும் தங்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வந்தனர். தாங்கள் கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பாதுகாப்பு வழங்குபவை தான் என்ற…

மேலும்...

அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (16 ஜன 2020): அனைத்து வங்கிகளிடமும் பயனர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ஆகியவற்றைக் கொடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும், கடன் அட்டைப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், இந்த கோரிக்கையை ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இவற்றில் ஆன்லைன், உள்நாட்டு / சர்வதேச கார்டுகள் அடங்கும். பல ஆண்டுகளாக, கடன் அட்டைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பயனர் வசதியை மேம்படுத்துவதற்கும், அட்டை பரிவர்த்தனைகளின்…

மேலும்...

காஷ்மீர் மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (10 ஜன 2020): இணையதள சேவை இல்லாமல் இருந்து வரும் காஷ்மீர் மக்கள், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு குறித்து அறிந்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள்…

மேலும்...