விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் உண்டு: உயர்நீதிமன்றம்!

பிரக்யாராஜ் (05 ஜன 2023): அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து குறித்து முக்கிய தீர்ப்பை அளித்தது. அதன்படி “ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு.” என்று தெரிவித்துள்ளது. விவாகரத்துக்கு முன்பு எப்படி அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதோ அதே முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘இத்தா’ என்பது முஸ்லிம் பெண்கள் தங்கள்…

மேலும்...

வீடுகளை இடித்த அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முஸ்லிம்கள் முடிவு!

போபால் (16 ஏப் 2022): மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு முஸ்லிம்களின் வீடுகளை இடித்த நிலையில் இதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசம் கார்கோன் நகரில் ராமநவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் வன்முறையில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் வீடுகளை மட்டும் அரசு இடித்து தள்ளியுள்ளது. இதனால் பலர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். “அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாட உள்ளோம்” என்று போபால் ஷஹர் காசி…

மேலும்...

ஹிஜாப் தடையால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

பெங்களூரு (18 மார்ச் 2022): ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குச் செல்ல முடியாத முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் அணியாமல் தேர்வெழுத மற்றொரு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் பல மாணவிகள் நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு முன்பு ஹிஜாப் விவகாரத்தால் தேர்வை புறக்கணித்தனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு எழுத மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற பாஜக…

மேலும்...

எனக்கு வேறு வழி தெரியவில்லை – ஹிஜாப் தடை உத்தரவால் சிக்கித்தவிக்கும் மாணவி!

உடுப்பி (17 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவு மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் அமல்படுத்தப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கல்வி நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளன. சில மாணவிகள் முக்காடுகளை அகற்றிவிட்டு வகுப்புகளுக்குச் செல்ல முன்வந்துள்ளனர். உடுப்பியில் உள்ள அரசு எம்ஜிஎம் கல்லூரியின் மாணவி ஒருவர், தனது முக்காடை அகற்றிவிட்டு வகுப்பறைக்குச் செல்ல முடிவு செய்தபோது வகுப்பறையில் தனக்கு…

மேலும்...

பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் தீர்ப்பு!

லக்னோ (01 செப் 2021): பசுமாட்டை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் மாடு அறுத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் முதியவரின் ஜாமீன் மனுவை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம் .பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்…

மேலும்...

ஒன்றிய அரசு என அழைக்கலாமா? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை (01 ஜூலை 2021): ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திமுக புதிய அரசாங்க பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை “ஒன்றிய அரசு” என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

தப்லீக் ஜமாத்தினர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

மதுரை (16 ஜூன் 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் அவரவர் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா விசா மீறல், உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான 31 தப்லீக் ஜமாத்தினருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம். அவர்கள் அனுபவித்த தண்டனை காலமே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமானது என கூறி அவர்களை அவரவர்கள் நாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், இந்தோனேசியா…

மேலும்...

சட்ட அமைச்சரின் வெற்றி செல்லாது – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

அகமதாபாத் (12 மே 2020): குஜராத் மாநில சட்த்துறை அமைச்சர் புபேந்திரசிங் சூடஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்கா தொகுதியில் புபேந்திரசிங் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரத்தோட்டைவிட 327 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த தோல்கா துணை…

மேலும்...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விவகாரம் – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சாவூர் (31 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை தமிழ் ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூறியபடி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடைபெறும் என உத்தரவிடப்பட்டது. குடமுழுக்கு…

மேலும்...