21ஆம் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி- கத்தாருக்கு முதலிடம்!

தோஹா: 21ம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தியதில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. 2002 முதல் 2022 வரையிலான கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் குறித்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் கத்தார் முதலிடம் பிடித்தது. இந்த நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 78 சதவீதம் பேர் கத்தாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடம் ஜப்பானும் கொரியாவும் இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியாகும். 2014-ம் ஆண்டு…

மேலும்...

சிறு வியாபாரி தந்தைக்கும் வீட்டுப் பணிப்பெண் தாய்க்கும் பிறந்த மொராக்கோ வீரர் ஹக்கீமி!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. ஜாம்பாவான்களை வெளியே அனுப்பிவிட்டு மொராக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் 24 வயது அஷ்ரஃப் ஹக்கீமி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய காலிறுதி முந்தைய போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்டி சூட்டில் கோல் அடித்து மொராக்கோ காலிறுதிக்குள் நுழைய மிக முக்கிய…

மேலும்...

மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “உலகக் கோப்பையில் மொராக்கோவைத் தாண்டி யாரும் இல்லை. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். மொராக்கோவின் சிங்கங்கள் அரபுக் கனவை நனவாக்குகின்றன” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.  

மேலும்...

உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள் மற்றும் கத்தாரின் விருந்தோம்பலை இந்த குழந்தைகள் உலகிற்கு காட்டி ஆச்சர்யப்படுத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்துக்கு வரும் ரசிகர்களின் முக்கிய பயண பாதை தோஹா மெட்ரோ ஆகும். போட்டி நேரத்தில் மெட்ரோ நிரம்பியிருக்கும். ஒவ்வொரு நிலையமும் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவையாகும்….

மேலும்...

கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தா இந்தியா வர அழைப்பு!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார், கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அசிம் வெலிமன்னா. அசிம் வெலிமன்னா உலகக்கோப்பை போட்டியை காண்பதற்காக கத்தார் வந்துள்ளார். அவரை கானிம் அல் முஃப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தனர். இந்நிலையில் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு அழைத்துள்ளார் அசிம் வெலிமன்னா. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான போராட்டங்களில் குறிப்பிடத் தக்கவர் ஆசிம் என்பது…

மேலும்...

இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!

தோஹா (15 செப் 2022): உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி கத்தாரில் தற்காலிக தூதரகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையை காண வரும் இஸ்ரேல் மக்களுக்கு உதவி புரியும் விதமாக கத்தாரில் தற்காலிக தூதரகம் அமைக்க இஸ்ரேல் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை கத்தார் நிராகரித்ததாக உள்ளூர் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2008 காசா தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை கத்தார் துண்டித்தது. சர்வதேச…

மேலும்...