82 நாடுகளில் உருமாறிய கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஜெனீவா (02 பிப் 2021): இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா உலகின் 82 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோசனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டு உள்ளன. தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா…

மேலும்...

அமெரிக்காவின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகம்!

வாஷிங்டன் (30 மே 2020): உலக சுகாதார அமைப்பிலிருந்து(WHO) வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகம் முழுக்க நடைபெறும் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்காக, ஐ.நா சபையின் கிளை அமைப்பாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் உலக சுகாதார நிறுவனம். சுமார் 194 நாடுகள் இதன் உறுப்பு நாடுகளாகத் தற்போது வரை இருக்கும் நிலையில், அமெரிக்கா தற்போது இந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக…

மேலும்...

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவு!

புதுடெல்லி (26 மே 2020): ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனையை நிறுத்த உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக…

மேலும்...

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவரகிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

புதுடெல்லி (20 மே 2020): உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன், நாளை மறுதினம் பதவியேற்கிறார். உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍ குழு தலைவராக தற்போது, ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகாதனி இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தனை நியமிக்‍க, 130 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை மறுதினம் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு…

மேலும்...

ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா உயிரிழப்பு – உலக சுகாதார அமைப்பு கவலை!

ஜெனீவா (02 ஏப் 2020): கொரோனா உயிரிழப்பு ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் , தற்போது உலகம் முழுவதையும் விழிபிதுங்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 935,840-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,241 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து 194,286 மீண்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகள் கடந்த ஒரே…

மேலும்...