எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய 50 அதிமுக எம்.எல்.ஏக்கள் – சிக்கித்தவிக்கும் முதல்வர்!

சென்னை (19 மார்ச் 2021): அ.தி.மு.க.,வில், 50 எம்.எல்.ஏ.,களுக்கு, ‘சீட்’ வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் எடப்பாடிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சிலர் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். சிலர் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக களம் காணுகின்றனர். சிலர்  தங்களது ஆதரவாளர்களுடன் கட்சிக்குள் இருந்துகொண்டே அதிமுகவை கவிழ்த்த உள் குத்து வேலைகளில் இறங்கிவிட்டனர். சாத்துார் எம்.எல்.ஏ., ராஜவர்மன், உடனடியாக, தினகரன் பக்கம் சாய்ந்தார். அங்கே, ‘சீட்’ வாங்கி, சாத்துாரில் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்கிறார். வீதி வீதியாக…

மேலும்...

அமித்ஷாவின் அதிரடி திட்டம் – அப்செட்டில் எடப்பாடி!

சென்னை (02 மார்ச் 2021): அதிமுகவுடன் சசிகலா இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் இதனால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாஜகவுக்கு 22 அல்லது…

மேலும்...

ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் தாமதிப்பது ஏன் – ஸ்டாலின் கேள்வி!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப்…

மேலும்...