செய்தியாளர்களிடம் பேசியதை ஏன் தீர்மானமாக்கக் கூடாது? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (14 மார்ச் 2020): “என்பிஆர் இப்போதைக்கு செயல்படுத்தப்போவதில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியதை ஏன் சட்டசபையில் தீர்மானமாக்கக் கூடாது?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். சட்டபேரவை நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் என்.பி.ஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று கூறியது சட்டசபையில் விவாதமானது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பிஉதயகுமார், “செய்தியாளர்களிடம் எந்த புதிய திட்டங்களையும் அறிவிக்கவில்லை. என்.பி.ஆரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுபான்மையினரிடையே பதட்டமான சூழல் ஏற்படுத்தும் விதமாக…

மேலும்...

என்பிஆர் தமிழகத்தில் நிறுத்தி வைப்பு – அமைச்சர் உதயகுமார் தகவல்!

சென்னை (13 மார்ச் 2020): மத்திய அரசு இதுவரை தமிழக அரசின் கோரிக்கைக்கு பதிலளிக்காததால் என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், என்பிஆரை பழைய முறையில் அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் என்பிஆர் சட்டத்தை அமல் படுத்துவதில் இஸ்லாமியர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்போம், 3 கேள்விகள் இருக்காது, மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. நேற்று சட்டப்பேரவையில்…

மேலும்...

என்.பி.ஆருக்கு ஆவணங்கள் எதுவும் சமர்பிக்க தேவையில்லை – அமித் ஷா!

புதுடெல்லி (13 மார்ச் 2020): “என்.பி.ஆருக்கு ஆவணங்கள் ஏதும் தேவையில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஆர் கணக்கெடுப்பு தொடங்கவுள்ள நிலையில், இதுகுறித்து நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அமித்ஷா, “என்.பி.ஆர். கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஆவணங்கள் ஏதும் மக்கள் அளிக்கத் தேவையில்லை. உங்களிடம் எந்த தகவல் இருக்கிறதோ அதை அளித்தால் மட்டும் போதும். தெரியாத கேள்விகளை நீங்கள் விட்டு விடலாம்” என்றார். மேலும்…

மேலும்...

என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார்? – தமிமுன் அன்சாரி அதிரடி!

சென்னை (05 பிப் 2020): நடிகர் ரஜினியின் முன்னோர்கள் ஆவணம் உண்டா இல்லையேல் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று ரஜினி தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, “கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில்,…

மேலும்...

குடியுரிமை சட்டம் (CAA) NRC – NPR: ஒரு பார்வை!

குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் (சிஏஏ) மேற்கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டமாக அது நடைமுறைக்கும் வந்துள்ளது. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கான (என்பிஆா்) கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான (என்ஆா்சி) கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தாா். எனினும், தற்போதைக்கு நாடு முழுவதும் என்ஆா்சி அமல்படுத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆா். என்ஆா்சி ஆகியவை…

மேலும்...

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

திருவனந்தபுரம் (16 ஜன 2020): கேரளாவில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) எடுக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் கேரள அரசு ஒரு படிமேலே போய் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதனை எதிர்க்கும் உறுதியான மாநிலமாக திகழ்கிறது….

மேலும்...