மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் – நீதிமன்றத்தில் மனு!

சென்னை (08 ஏப் 2022): பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்ததை, நான்கு வழக்குகளிலும் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக…

மேலும்...

வானதியை கிண்டலடித்த எஸ்வி சேகர் – முகம் சுளிக்கும் பாஜகவினர்!

சென்னை (17 ஜூன் 2021): பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை எஸ்வி சேகர் கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பாஜகவினரை முகம் சுழிக்க வைத்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில போட்டியிட்டு கடைசி நேர இழுபறியில் கமலை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றவர் பாஜக வானதி. இவர் 3 நாளைக்கு முன்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவகத்தை திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவில், வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்…..

மேலும்...

எஸ்.வி.சேகரை கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி!

திண்டுக்கல் (07 ஆக 2020): எஸ்.வி.சேகர் எந்த கட்சியை சேர்ந்தவர்? என்று முதல்வர் எடப்பாடி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், எஸ்வி சேகரின் கருத்து குறித்து கேட்டபோது, “எஸ்.வி சேகர் ஏதாவது பேசுவார் வழக்கு என வந்தால் ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும்? அவரையெல்லாம்…

மேலும்...

எஸ்.வி.சேகர் மானம், ரோஷம் உள்ளவரா? – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

சென்னை (05 ஆக 2020): நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர்  சமீபத்தில் அதிமுக-வை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் எஸ்.வி.சேகரின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தெரிவித்ததாவது: ”மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா தான் இவரை அடையாளம் காட்டினார். அந்த தொகுதியில் இவர் எந்தக் கொடியை காட்டி ஓட்டு வாங்கினார்? அதிமுக கொடி, அண்ணா பெயரை சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். அவ்வளவு மான ரோஷம் சூடு இருந்தால் அந்த ஐந்து…

மேலும்...

எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் முஸ்லிம்களுக்கு திடீர் பாராட்டு!

சென்னை (21 ஏப் 2020): பிற கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க தங்களது தங்களது பிளாஸ்மாவை வழங்க முன் வந்துள்ள தப்லீக் ஜமாத்தினருக்கு எஸ்வி சேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜக வை சேர்ந்த எஸ்வி சேகர் முஸ்லிம்களை குறி வைத்து தாக்கி பதிவிட்டு வருவார். ஒட்டு மொத்த இந்துத்வா கொள்கையினரும் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரப்பி வந்தனர். இது இப்படியிருக்க திடீர் திருப்பமாக முஸ்லிம்களை பாஜகவினர்…

மேலும்...

மோடிக்கு கொரோனா ஆதரவு – எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும்…

மேலும்...

தமிழக பாஜக தலைவராகும் எச்.ராஜா?

சென்னை (18 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் தமது தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரான பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதியவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. 11, 12 பேர் கொண்ட பட்டியல் டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பொன் ராதாகிருஷ்ணன்,…

மேலும்...