இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி(13 ஜன 2022): இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,47,417 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நேற்றையதை விட 50,000-க்கும் அதிகமான வழக்குகள் அதிகரித்ததன் மூலம், இந்தியா சுமார் எட்டு மாதங்களில் முதல் முறையாக 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் புதன்கிழமை சுமார் 10,000 புதிய வழக்குகளுடன் அதிக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 ஐ ஒரு தொற்றுநோயாகக் கருதாமல், காய்ச்சல் போன்ற ஒரு உள்ளூர்…

மேலும்...

ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 70 சதவீதம் வரை ஆதிக்கம் செலுத்தும்!

கவுடங்க் (31 டிச 2021):தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகானத்தின் புதிய ஆராய்ச்சியின்படி ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்த கூடுதல் தகவலை அளித்துள்ளது. அதன்படி ஃபைசர் கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக 70 சதவீதம் வரை ஆதிக்கம் செலுத்தும் என்று நியூ இங்கிலாந்து மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கோவிட்-19 சோதனைகளில் ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது,…

மேலும்...

இந்தியாவில் 1270 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (31 டிச 2021): இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஒமிக்ரான் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எகிறத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் 46 பேர் ஒமிக்ரான் பாதிப்புடன்…

மேலும்...

இன்று முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு!

மும்பை (30 டிச 2021): பெருகிவரும் கோவிட் பரவலை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார். இ௹ஆ உத்தரவின்படி புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், விடுதிகள், ஓய்வு விடுதிகள் மற்றும் கிளப்புகளில் எந்த நிகழுகளுக்கும் அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் பிரிவு 188ன்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மீண்டும் பரவும் கொரோனா – புதிய வழிமுறைகள் இன்று முதல் அமல்!

ரியாத் (30 டிச 2021): சவுதி அரேபியாவில் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் அனுமதி 50% இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். கடைகள் மற்றும் வணிக வளாகங்களிலும் ஒன்றரை மீட்டர் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் (டிசம்பர் 30, 2021) இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும்  வணிக வளாகங்கள், பணியிடங்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். இவற்றை வாகனங்களிலும் அணிய வேண்டும். முகக்கவசம் அணியத் தவறினால் 1,000 ரியால் வரை…

மேலும்...

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (25 டிச 2021): இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றன. நாட்டில் இதுவரை 415 ஓமிகான் வழக்குகள் பதிவாகியுள்ளன. 115 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில்தான் அதிக ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன. அங்கு 108 பேருக்கு ஒமிக்ரான் பரவியுள்ளது. 79 வழக்குகளுடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத்-43 மற்றும் தெலுங்கானா-38. நோய் கண்டறியப்பட்டவர்களில் சுமார் 70% பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. ஓமிக்ரான் பரவலால் கிறிஸ்துமஸ் மற்றும்…

மேலும்...

துபாயிலிருந்து வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியம்!

மும்பை (25 டிச 2021): ஒமிக்ரான் பரவிவரும் சூழலில் துபாயில் இருந்து மும்பை செல்லும் பயணிகளுக்கு ஏழு நாள் கட்டாய தனிமைப்படுத்தல் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. துபாயில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பயணிக்கும் பயணிகள் ஏழு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, தனிநபர் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்படுவர். சோதனை முடிவு எதிர்மறையாக (நெகட்டிவ்) இருந்தாலும், இன்னும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். நேர்மறை (பாசிட்டிவ்) சோதனை முடிவு எனில், அதிகாரிகள் நோயாளியை மருத்துவமனைக்கு…

மேலும்...

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு – அமைச்சர் தகவல்!

சென்னை (23 டிச 2021): தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்முலம் தமிழகம் இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 34 ஆக அதிகரித்துள்ளது. சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன; அதில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டியுள்ளதாகவும் அமைச்சர்…

மேலும்...

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் 101 பேர் பாதிப்பு!

புதுடெல்லி (17 டிச 2021): இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவின் புதிய வகை ஒமிக்ரான் 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்தவகையில் இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 32, டெல்லியில் 22, ராஜஸ்தானில் 17,…

மேலும்...

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு?

சென்னை (16 டிச 2021): தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்திய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் ஒருவருக்கு நேற்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒரே இடத்திலிருந்து 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம்…

மேலும்...