முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் மரணம்!

சென்னை (21 டிச 2021): மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உதவியாளராக பணிபுரிந்த சண்முகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சுமார் 50 ஆண்டுகளாக தனி உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதனுக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சண்முகநாதன் உயிரிழந்தார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துகளை எழுத்துமூலம் வெளியிட்டவர் சண்முகநாதன். அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டார் இவர். கருணாநிதியால் எழுதமுடியாத சூழல் ஏற்பட்ட…

மேலும்...

கருணாநிதிக்காக தமிழகம் வரும் குடியரசுத்தலைவர்!

சென்னை (02 ஆக 2021): இன்று தமிழகம் வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராகவும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தும், பல அழியாத முத்திரைகளை பதித்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் என்றென்றும் மறக்க முடியாத அவரது உரைகள், நிறைவேற்றிய திட்டங்கள், எப்படி அரசுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறதோ, அதுபோல இனி சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம், அங்கு அமர்ந்திருக்கும், எதிர்காலத்தில் அமரப்போகும் உறுப்பினர்களுக்கு பாடமாக விளங்கும். தமிழக…

மேலும்...

பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்த குஷ்பூ!

சென்னை (03 ஜூன் 2021): கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவினர் கருணாநிதியையும், திமுகவையும் சாடியே பதிவிடுவார். இந்நிலையில் குஷ்பூ வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் எனக்கொரு சிறந்த ஆசான் என்று கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாஜக நிர்வாகி குஷ்பு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். குரு என்பவர் கடவுளுக்கும் மேலானவர். உங்கள் அருள் எனக்கு எப்போதும் இருக்கும் என்று அவர்தெரிவித்துள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய…

மேலும்...

கருணா நிதி : படிக்க வேண்டிய வரலாறு!

Karunanidhi : The Definitive Biography by Vasanthi ( India Today Former Tamil Editor) கருணாநிதி.. இந்தப் பெயர் சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்கு வெறுப்பைத் தரலாம். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் அவர் ஒதுக்கப்பட முடியா நபர் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்வை எந்தப் பக்கசார்புமின்றி எழுதுவது கடினம். இந்தியா டுடே தமிழ் முன்னாள் ஆசிரியரும் கலைஞரை அதிகம் விமர்சித்தவருமான வாசந்தி நடு நிலையாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 20…

மேலும்...

திருமண விழாவில் பிறந்தநாள் – அசரடித்த அழகிரி!

மதுரை (30 ஜன 2020): முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி நேற்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார். திமுக ஆட்சியில் இருந்தபோது அவரது பிறந்த நாளன்று, மதுரையே திருவிழா கோலம் பூண்டிருக்கும். அவரது ஆதரவாளர்கள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழகிரியையும், அவரது குடும்பத்தினரையும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்திற்கு அழைத்து வந்து பிறந்த நாள் விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுவார்கள். மு.க.அழகிரி, கேக் வெட்டி, நலிவடைந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார். விழாவில் கலந்து கொண்டோருக்கு…

மேலும்...