புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

ஜம்மு (26 செப் 2022): ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை துவக்கினார். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி, தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் இன்று வெளியிட்டார். தனது கட்சிக்கு ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ எனப் பெயரிட்டுள்ள…

மேலும்...

51 தலைவர்கள் விலகல் – காஷ்மீரில் காலியாகும் காங்கிரஸ்!

ஜம்மு (30 ஆக 2022): குலாம் நபி ஆசாத்தின் விலகலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 51 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர். காங்கிரஸ் முத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது காங்கிரஸ் கட்சியை துவழச் செய்தது. இந்நிலையில் காஷ்மீரின் 51 தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விளக்கியுள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் ஆசாத்தின் புதிய கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கட்சியில் இருந்து…

மேலும்...

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்!

புதுடெல்லி (26 ஆக 2022): மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார் மேலும் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதியுள்ள ஆசாத், “மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் இந்திய தேசிய காங்கிரஸுடனான எனது அரை நூற்றாண்டு தொடர்பைத் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். ஜெய்வீர் ஷெர்கில், கபில் சிபல், அஸ்வனி குமார், ஹர்திக் படேல் மற்றும் சுனில்…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா!

புதுடெல்லி (17 ஆக 2022): ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்துள்ளார் உடல் நலக் காரணங்களை சுட்டிக்காட்டி, குலாம் நபி ஆசாத் புதிய பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். காங்கிரஸ் பிரசாரக் குழு செவ்வாய்க்கிழமை புதிதாக அமைக்கப்பட்டது. தாரிக் ஹமீத் கர்ரா பிரச்சாரக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், ஜி எம் சரூரி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமாவை காங்கிரஸ்…

மேலும்...

இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் – குலாம் நபி ஆசாத் பரபரப்பு பேட்டி!

புதுடெல்லி (12 பிப் 201): 1979 பொதுத் தேர்தலில், 95 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஒரு இந்து வேட்பாளரையே தோற்கடித்தவன் நான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ல் முடிவடைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி…

மேலும்...

இந்திய முஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் – குலாம்நபி ஆசாத் உருக்கம்!

புதுடெல்லி (09 பிப் 2021): நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் உருக்கமாக பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குலாம்நபி ஆசாத், தற்போது மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15ம் தேதி வாக்கில் முடியவுள்ளது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஓய்வு பெறுவதால் அவருக்கு…

மேலும்...

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று!

புதுடெல்லி (16 அக் 2020): காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா தொற்று முக்கிய தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,.இது குறித்து டுவிட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தனிமைப்படுத்தி உள்ளேன். என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும்...