கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மத்திய அரசு பின்வாங்கல்!

புதுடில்லி (14 ஜன 2021): கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மட்டுமே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்றும் மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவிட் 19 தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கோவிட் தடுப்பூசி குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது, எனவே அதன் பக்கவிளைவுகளுக்கு அரசாங்கமு ம் பொறுப்பேற்க…

மேலும்...

சவுதியில் தன்னார்வத்தோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இந்தியர்கள்!

ரியாத் (07 ஜன 2021): சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் பல இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மதம் முதல் சவுதியில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மேலும் தடுப்பூசியை தன்னார்வத்தோடு பெற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்முலம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி பலர் தடுப்பூசிக்கு…

மேலும்...

கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர்.- சவூதி சுகாதார அமைச்சர் தகவல்

ரியாத் (23 டிச 2020): சவுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஹம்மது அல்-அப்துல் அலி செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அமைச்சக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட் தடுப்பூசி எடுத்த அனைத்து உள்நாட்டு , வெளிநாட்டவர்களுக்கு எந்த எதிர் அறிகுறிகளையும் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டினார். அமைச்கத்தின் மொபைல் செயலி செஹாட்டி (என் உடல்நலம்) மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்யுமாறு அனைவருக்கும் அல்-அப்துல்…

மேலும்...