மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் பதவி யாருக்கு?

சென்னை (08 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும். 1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் அவர் நீடித்து வந்தார். அவர் காலமானதை அடுத்து அடுத்த மூத்த தலைவருக்கே இந்த…

மேலும்...

பேராசிரியர் க.அன்பழகன் உடல் இன்று மாலை தகனம்!

சென்னை (07 மார்ச் 2020): மறைந்த திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். வயது முதிா்வின் காரணமாக, அரசியல் பணிகளில் இருந்து விலகி, கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் தோட்டம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு பிப்ரவரி 24-ஆம்…

மேலும்...

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணம்!

சென்னை (06 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர்  பேராசிரியர் க. அன்பழகன் இன்று (6-3-2020) நலக்குறைவால் காலமானார். க. அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அது பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மரணமடந்தார். அவருக்கு வயது 98.

மேலும்...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்!

சென்னை (28 பிப் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 97 வயதாகும் க.அன்பழகன் மூச்சுத் திணறல் பிரச்னையால், கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அன்பழகனுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், புதன் கிழமை இரவு முதல் அவர் கண் திறக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், கவலைக்கிடமான…

மேலும்...

திமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – அன்பழகன் அதிரடி நடவடிக்கை!

சென்னை (04 பிப் 2020): திமுகவின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாள அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, அவர் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நியமிக்கப்படுகிறார். தேர்தல் பணிக் குழுச் செயலாளராக இருந்த டி.எம். செல்வகணபதி அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். மாவட்டப்…

மேலும்...

டி.ஆர்.பாலு நீக்கம் – கே.என்.நேருக்கு பதவி!

சென்னை (26 ஜன 2020): திமுகவில் டி.ஆர்.பாலு வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக அவர் வகித்து வந்த திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருவுக்கு வழங்கப்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கே.என்.நேருக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும்...