அலறும் தொண்டர்கள் – பதறும் அதிமுக தலைமை!

சென்னை (30 ஏப் 2021): ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம் என அதிமுகவினருக்கு தலைமை தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் சூழ்நிலையில், “வாக்குக் கணிப்பு”-“எக்சிட் போல்” என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித்…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்!

சென்னை (30 மார்ச் 2021): கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக, அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்!

ராணிபேட்டை (03 ஜன 2020): தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன், “ முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனக் கூறினார். அவரது இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய, அதிமுக தலைவர்கள் அதனை மறுத்து, முதல்வர் வேட்பாளர் என்றுமே எடப்பாடி…

மேலும்...

திமுக மீது முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி!

சென்னை (02 ஜன 2021): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஆசாதுதீன் ஒவைசியை அழைக்க திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், திமுகவின் முடிவு குறித்து அதன் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் அதிருப்தி அடைந்துள்ளது. லீக்கைத் தவிர,திமுக ஏ கூட்டணியில் உள்ள இதர முஸ்லிம் கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவைசி மற்றும் திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடைபெறுவதாக செய்திகள்…

மேலும்...

திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் – மனித நேய மக்கள் கட்சி செயற்குழு தீர்மானம்!

சென்னை (22 டிச 2020): வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியை வெற்றியடைய செய்வதற்கு அயராது பாடுபடுவோம் என்று தலைமை செயற்குழு தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து மமக செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு அடிமைச் சேவகம் செய்து மாநிலங்களின் உரிமைகளை காவு கொடுத்து வருகின்றது. அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து…

மேலும்...

அதிமுகவுக்கு எதிராக பாஜக தலைவர்கள் போர்க்கொடி!

சென்னை (21 டிச 2020): எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை தொடர்ந்து விமர்சித்துவிட்டு பின்பு அப்படியில்லை எண்டு மழுப்புவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கிடையே கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்ட நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை, மிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ. 2000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். 2 ஆயிரத்தை நம்பி 5…

மேலும்...

கட்சியே ஆரம்பிக்கவில்லை அதற்குள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை – ரஜினியின் தலைசுற்றல் நடவடிக்கை!

சென்னை (21 டிச 2020): மாற்று கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாக கூறி இன்னும் தொடங்காத ரஜினி கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல இழுபறிகளுக்கு இடையே சற்று குழப்பமான சூழ்நிலையில் ஜனவரி மாதம் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அது குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரஜினி கட்சியின் பல மாவட்டச் செயலாளர்கள் 22 பேர் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு…

மேலும்...

பாஜகவுக்கு சவால் விடும் அமைச்சர் ஜெயகுமார் – சிறப்பு நேர்காணல்!

சென்னை (24 செப் 2020): அதிமுகவின் இடத்தை பாஜகவால் பிடிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்த நேர்காணல்: கே. மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விவசாயிகளுக்கான சட்டங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. இதனை அதிமுக ஆதரிக்ககாரணம் என்ன? ப. இது தொடர்பாக முதல்வர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலேயே நாங்கள் ஏன் ஆதரித்தோம் என்பதற்கான காரணங்கள் இருக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம், வருமானம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்தச் சட்டங்கள் இருக்கின்றன…

மேலும்...

அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது…

மேலும்...

தள்ளிப்போகிறதா தமிழக சட்டப்பேரவை தேர்தல்?

சென்னை (01 ஜூன் 2020): கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும்,…

மேலும்...