துனிஷா சர்மாவை தொடர்ந்து மற்றுமொரு நடிகை தற்கொலை!

மும்பை (28 டிச 2022): நடிகை துனிஷா சர்மாவைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான லீனா நாக்வன்ஷி என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10…

மேலும்...

பிரசவ வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

துபாய் (25 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரசவ அறுவை சிகிச்சையின் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மருத்துவர் மீது இளம் பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெண் ஒருவர், அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் பிறப்பு வீடியோவை வெளியிட்டதற்காக 50,000 திர்ஹாம் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த பெண் மருத்துவமனை மீதும், வீடியோ பதிவு செய்த மருத்துவர் மீதும் புகார் கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். பிரசவத்தின்போது தன் அனுமதியைக் கூட…

மேலும்...

சவூதியில் சமூக வலைதளத்தில் இஸ்லாத்திற்கு எதிராக பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட இந்தியர் ஹரீஷ் விடுதலை!

தம்மாம் (19 ஆக 2021): சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியா தம்மாமில் பணிபுரிந்து வந்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரீஷ். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சமூக வலைதளத்தில் புனித மக்காவையும், சவூதி அரசாங்கத்தையும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். கைதான ஹரீஷை விடுதலை செய்ய…

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு – துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை!

துபாய் (02 மே 2020): சமூக வலைதளங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு தொடர்ந்த வண்ணமே உள்ள நிலையில் துபாயில் மேலும் மூவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீப காலமாக சமூக வலைதளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகள் அதிகரித்தபடி உள்ளன. இது வளைகுடாவில் பணிபுரிந்து வரும் இந்துத்வா கொள்கையளர்களிடம் அதிகம் காணப்படுகின்றன. முன்பெல்லாம் இது அதிக கவனம் பெறாத நிலையில் இவ்விவகாரம் தற்போது வளைகுடாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளுக்காக வளைகுடாவில் பலரும் சட்டப்படியான நடவடிக்கைகளை…

மேலும்...

சமூக வலைதளங்களிலிருந்து மோடி விலகல் – திடீர் அறிவிப்பு!

புதுடெல்லி (02 மார்ச் 2020): அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் தாம் விலகத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று திடீரென ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய சமூக வலைதளக் கணக்குகளை விட்டு நீங்கிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அதேவேளை “நான் எதுவும் பதிவிட மாட்டேன், உங்களைப் பதிவிட வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். உலகின் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட மோடி எதற்காக சமூகதளத் தொடர்புகளைக் கைவிட வேண்டும்…

மேலும்...

ஆங்கில தமிழாக்கம் – வடிவேலு வெர்ஷன்: ரிலாக்ஸ் ப்ளீஸ்

வடிவேலுவின் வருகைக்குப்பிறகு நம் பேசுமொழி எத்தனை மாறியிருக்கிறது என்று இந்த நீண்ட பட்டியலைக்கண்டால் வியப்பாக இருக்கிறது…* _Oh shit_ – *வட போச்சே* _Is it so?_ – *ஆஹாம்* _Be careful_ – *மண்ட பத்திரம்* _Back to square one_ – *மறுபடியும் முதல்லருந்தா?* _I feel you, bro_ – *வொய் ப்லெட்? சேம் ப்லெட்* _You are useless_ – *நீ புடுங்குனது பூராவுமே தேவையில்லாத ஆணிதான்* _Inflated ego_ –…

மேலும்...

சமூக வலைதள அவதூறு பதிவுகளுக்கு எதிராக புதிய சட்டம்!

கொழும்பு (24 ஜன 2020): சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்காக இலங்கை கணினி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள…

மேலும்...

சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டவர்கள் யார் யார்? – நீதிமன்றம் உத்தரவு!

சென்னை (22 ஜன 2020): “சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்த 10 பேரின் பெயர் பட்டியலை இன்றே அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்!” என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கருத்துகளை ஒருவர் பதிவிட்டிருந்தார். இவ் விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று…

மேலும்...

முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தி சமூக வலைதளங்களில் பதிந்தவர்களுக்கு ரூ 1 கோடி அபராதம்!

துபாய் (20 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு அபராதம் மற்றும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிந்த மூன்று பேருக்கு தலா 5 லட்சம் திர்ஹம் (இந்திய ரூபாயில் 9,671,125) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதம் கட்டிய பிறகு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையை…

மேலும்...