அமெரிக்காவில் அமேஸான் ஊழியருக்கு கரோனோ வைரஸ் – சியாட்டிலில் 9 பேர் பலி!

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் உள்ள அமேஸான் நிறுவன ஊழியரை கரோனோ வைரஸ் தாக்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் தன் ஊழியர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி, உடல்நலம் சரியில்லை என்று அந்த ஊழியர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் வேலைக்கு வரவில்லை. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரை COVID-19 கரோனோ வைரஸ் தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகவல் மார்ச் 3ந் தேதி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அத்தகவல் கூறுகிறது. தடுப்புக்காப்பில் உள்ள அந்த ஊழியருக்குத் தேவையான…

மேலும்...

அமெரிக்காவில் சியாட்டில் நகரில் மாணவருக்கு கொரோனா வைரஸ்!

சியாட்டில் (29 பிப் 2020):சியாட்டிலில் உள்ள எவரெட் நகரப் பகுதியில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவரை கொரோனா COVID-19 வைரஸ் தாக்கியுள்ளதாக அம்மாவட்டச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்கள் மாணவர்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இதை நாங்கள் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தில் அவர் தொடர்பு கொண்ட மாணவர்களுக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சுகாதாரத் துறையின் கண்காணிப்புடன் 14 நாள்கள் வீட்டிலேயே இருப்பார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு உலக அளவில் வலுக்கும் எதிர்ப்பு – இன்னொரு அமெரிக்க நகரசபை தீர்மானம்!

நியூயார்க் (14 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சியாட்டிலை அடுத்து மேலும் ஒரு அமெரிக்க நாட்டின் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது சர்வதேச அளவிலும் பரவியுள்ளது. உலகின் மிக முக்கிய நாடுகளின் தலைநகரங்களில் பொதுமக்கள் சிஏஏவை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியது….

மேலும்...

அமெரிக்காவில் அதிரடி – சியாட்டில் சிட்டி கவுன்சில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் – VIDEO

சியாட்டில் (04 பிப் 2020): அமெரிக்காவின் சியாட்டில் சிட்டி கவுன்சில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை உலகின் பலம் வாய்ந்த நகரசபையில் ஒன்றாகும். இங்கு இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நேற்று விவாதம் நடைபெற்றது. மேலும் வாக்கெடுப்பின் அடைப்படையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் அதிக வாக்குகள் கிடைத்ததை அடுத்து இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்…

மேலும்...

அமெரிக்க சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் (VIDEO)

சியாட்டில் (17 ஜன 2020): அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தெற்காசிய நாடுகளின் மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியற்றிற்கு எதிராக சியாட்டில் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் குறித்து விளக்கம் அளித்து பேசிய நகரசபை உறுப்பினர் கேஷ்மா சவந்த் (Kshama Sawant) குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை வலதுசாரி சிந்தனை உள்ள…

மேலும்...