கோழி இறைச்சி கடைக்கு சீல்!

புதுச்சேரி (21 மார்ச் 2020): புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சலுகை விலையில் கோழி இறைச்சி விற்பனை செய்து, கூட்டத்தை கூட்டிய கடைக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கோழிஇறைச்சியால் கொரோனா பரவவில்லை என்பதை தெரிவிப்பதற்காக, சலுகை விலையில் கோழிகள் விற்கப்படுவதாக அக்கடையில் விளம்பரம் வைக்கப்பட்டது. இதை பார்த்து நூற்றுக்கணக்கான மக்கள் கடை முன்பு கூடினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதெனக்கூறி, கூட்டத்தை கலைத்ததோடு, கோழிக்கடைக்கு…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!

அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். டாக்டர் மாதவி என்பவர் ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவமனை வைத்துள்ளார். இவரது கணவர் ஆஷிஷ், அகில இந்திய கிஷான் மஜூர் சபாவின் செயலாளராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியின் மருத்துவமனைக்கு ஞாயிறன்று சோதனை என்ற பெயரில் சென்ற போலீசார், டாக்டர் மாதவியின்…

மேலும்...

துரைமுருகன் ஆலைக்கு சீல்!

காட்பாடி (02 மார்ச் 2020): காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பொருளாளர் துரைமுருனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது. காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

மேலும்...