ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் உரிமம் ரத்து!

மும்பை (17 செப் 2022): ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிக்கும் உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிர எஃப்.டி.ஏ. அரசாங்க நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் குழந்தைகளின் தோலை பாதிக்கக்கூடும் என்று ஆய்வக சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில்…

மேலும்...

ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைக்க உத்தரவு!

நியூயார்க் (13 ஏப் 2021): அமெரிக்காவில் ரத்த உறைவு ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஒற்றை-டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுகாதார நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளன. அமெரிக்காவில் ஆறு பேருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்ற பிறகு இரத்த உறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது இதனை அடுத்து அதனை நிறுத்தி வைக்க அமெரிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ஏறக்குறைய ஏழு மில்லியன் மக்கள் இதுவரை ஜான்சன் அண்ட் ஜான்சன்…

மேலும்...