ஜெயலலிதா இறந்த நாள் நல்ல நாளா? எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை (06 டிச 2022): ஜெயலலிதா இறந்த நாளான நேற்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனீஆக ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி உறுதி மொழியை வாசிக்கும்போது, ‘அம்மா இறந்த நன்னாளில்’ என்று வாசித்தார். இதனை அதிமுகவினரும் சேர்ந்து வாசித்தனர். அதிமுகவினரின் அபிமானத்திற்குரிய அம்மாவின் இறந்த நாள் எப்படி நன்னாளாக இருக்க முடியும்? என்று எடப்பாடி பழனிச்சாமியை…

மேலும்...

ஜெயலலிதா மரண விவகாரத்தில் எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார் – சசிகலா!

சென்னை (19 அக் 2022): ஜெயலலிதா சிகிச்சையில் குளறுபடி செய்யப்படவில்லை, எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இதற்கு சசிகலாவே முழு பொறுப்பு என்றும் ஆறுமுகசாமி கமிஷன் நேற்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வி.கே.சசிகலா ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையை நிராகரித்தார். ஜெயலலிதாவின் சிகிச்சையில் தான் உட்பட 3 பேர் தலையிடவில்லை என்றும், எந்த விசாரணையையும் சந்திக்க தயார் என்றும்…

மேலும்...

அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு – அந்தர் பல்டி அடித்த ஓபிஎஸ்!

சென்னை (22 மார்ச் 2022): ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விமர்சித்து வந்த ஓ.பன்னீர் செல்வம் திடீரென அப்படி எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்றும் இன்றும் ஓபிஎஸ் ஆஜராகி பதிலளித்து வந்தார். இந்நிலையில் விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆணையத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன். உண்மையை ஆணையம் கண்டறிய வேண்டும். என்றார். மேலும் சசிகலாவை ‘சின்னம்மா’ என்று அழைத்த ஓபிஎஸ்,…

மேலும்...

எனக்கு எதுவுமே தெரியாது – ஜெயலலிதா குறித்து ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை (21 மார்ச் 2022): ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது. அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த…

மேலும்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை (07 மார்ச் 2022): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில்  ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அடுத்த கட்ட விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளது. முதல்நாள் விசாரணையில் அப்போலோ டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி 2016ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டாக்டர் சிவக்குமார் அழைத்ததன் பேரில்…

மேலும்...

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் தொடங்கும் விசாரணை!

சென்னை (02 மார்ச் 2022): ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு…

மேலும்...

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த…

மேலும்...

புதிய பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்!

சென்னை (17 செப் 2020): விழுப்புரத்தில் புதிதாக தொடங்க இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டாகப் பிரிக்கப்படும் பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவிற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது குறித்த ஆலோசனையில் உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே விழுப்புரத்தில் அமைய…

மேலும்...

எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிமுக துரோகம் இழைக்கிறது: ஸ்டாலின்!

சென்னை (31 ஜுலை 2020): “அதிமுக எம்.ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைக்கிறது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ” ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும்…

மேலும்...

தீபா தீபக் ஆகியோரே ஜெயலலிதாவின் நேரடி வாரிசு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை (29 மே 2020): தீபா, தீபக் ஆகியோரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் உள்பட சுமார் ரூ. 900 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த புகழேந்திர கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரது தம்பி…

மேலும்...