பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு -பொதுமக்கள் அதிர்ச்சி!

சென்னை (23 மார்ச் 2022): பெட்ரோல், டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 137 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யட்டு வந்த பெட்ரோல்,…

மேலும்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி…

மேலும்...

10 நிமிட சார்ஜில் 400 கிலோ மீட்டர்: சூப்பர் பேட்டரி!

நியூயார்க்(19/01/2021): வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்த கவலையும் அதனைக் குறைப்பதற்கான முயற்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எடுத்துவருகின்றன. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் கடந்து காற்றை மாசுபடுத்தாத பேட்டரி சார்ஜ் மூலம் இயங்கும் வாகனங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், எண்ணெயில் இயங்கும் வாகனங்கள் அளவுக்கு…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்!

சென்னை (21 ஜூன் 2020): பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களீன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது . அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக்…

மேலும்...

போற போக்கை பார்த்தால் யாரும் வாகனமே வாங்க மாட்டங்க போல!

சென்னை (16 ஜூன் 2020): பெட்ரொல், டீசல் விலை உயர்வால் பலருக்கு வாகனம் வாங்கும் ஆசையே போய்விடது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன. ஆனால், கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ்…

மேலும்...

பெட்ரோல் விலை உயர்வு!

சென்னை (05 ஜன 2020): பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.78.48 ஆகவும், நேற்றைய விலையில் இருந்து டீசல் 11 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.72.39 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மேலும்...