ஷர்ஜீல் இமாம் சிறையில் தொலைத்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? – ப.சிதம்பரம் கேள்வி!

புதுடெல்லி (05 பிப் 2023): ஷர்ஜீல் இமாம் மற்றும் அவரது நண்பர்கள் சிறையில் இழந்த நாட்களை யார் திருப்பி கொடுப்பார்? என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே வெடித்த வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் ஷர்ஜீல் இமாம் மற்றும் 10 பேர் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இது தொடர்பான…

மேலும்...

டெல்லி கலவரம் – தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

புதுடெல்லி (20 ஜன 2022): வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 2020 கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முதல் தண்டனை அறிவிக்கப்பட்டது. தினேஷ் யாதவ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 73 வயது மூதாட்டியின் வீட்டைக் கொள்ளையடித்து பின்பு அந்த வீட்டை எரித்ததற்காகவும், கலவரத்துக்குத் தலைமை தாங்கியதற்காகவும் தினேஷ் யாதவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. கோகுல்புரியில் உள்ள பகீரதி விஹாரில் வசிக்கும் 73 வயதான மனோரி என்பவரின் வீடு தினேஷ் யாதவால் தீக்கிரையாக்கப்பட்டது….

மேலும்...

சிறையில் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஸ்ரத் ஜஹானுக்கு துன்புறுத்தல் – நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (22 டிச 2020): டெல்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹானுக்கு சிறையில் சக கைதிகளால் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டதாக அளிக்கப் பட்ட புகாரை அடுத்து நீதிமன்றம் இஸ்ரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளது,. ஜஹான் அளித்துள்ள புகாரில்,”நான் ஒரு தவறான புகாரில் தண்டிக்கப்படுகிறேன். இது ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம். செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், அவர்கள் (கைதிகள்) என்னை மோசமாக அடித்து வாய்மொழியாக துஷ்பிரயோகம்…

மேலும்...

டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? – நேரில் பார்த்தவர் சாட்சியம்!

புதுடெல்லி (04 ஜூலை 2020): பிப்ரவரி 2020-இல் நடந்த டெல்லி கலவரத்தைப் பிரத்யேகமாக முன்னின்று நடத்தியவர் பாஜக கவுன்சிலர் என ‘நேரில் பார்த்தவர்’ சாட்சி பகர்ந்துள்ளார். “முல்லோன்கோ நிப்டாதோ” அல்லது “முஸ்லிம்களை வளைக்கச் செய்யுங்கள்” – வடகிழக்கு டெல்லியின் பாகீரதி விஹாரில் வகுப்புவாத வன்முறையின் போது பாஜக கவுன்சிலர் கன்ஹையா லால் தெரிவித்த உத்தரவுகள்தான் இவை, என அந்த பகுதியில் வசிப்பவர் டெல்லி காவல்துறைக்கு சாட்சி அளித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நடந்த…

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...

இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி…

மேலும்...

இந்தியா பேராபத்தில் உள்ளது – மன்மோகன் சிங் பரபரப்பு கட்டுரை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): இந்தியாவில் நடக்கும் இனப்படுகொலைகள், பொருளாதார மந்தநிலை, மற்றும் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உள்ளிட்டவைகளால் இந்தியா பேராபத்தில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்து பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது: “சமூக ஒற்றுமையின்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் உலக அளவில் வேகமாக பரவி வரும் தொற்றுநோய் (கொரோனா வைரஸ்) ஆகிய மூன்று பிரச்சனைகளால் இந்தியா உடனடியாக மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என்று மன்மோகன் சிங் தி…

மேலும்...

இது டெல்லி அல்ல கொல்கத்தா – மம்தா பானர்ஜி பொளேர்!

கொல்கத்தா (02 மார்ச் 2020):டெல்லியில் நடைபெற்றதைப் போல் இங்கும் ‘கோலி மாரோ’ என்று கூறிவிட்டு ஊர் சுற்ற முடியாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அமித் ஷா பேரணியில் கோலி மாரோ என்று கோஷமிட்ட மூவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். அதையடுத்து மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார். கொல்கத்தாவிலுள்ள நேதாஜி உள்ளரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, “பாஜக பேரணியில் டெல்லியைப் போல் ‘கோலி மாரோ’ என்று…

மேலும்...

டெல்லி போர்க்களத்தில் கைவிடப்பட்ட இந்து மணப் பெண்ணுக்கு கை கொடுத்த முஸ்லிம் இளைஞர்!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி வன்முறையின் நடுவே மணமகனால் கை விடப்பட்ட இந்து பெண்ணை முஸ்லிம் இளைஞர் முன்வந்து திருமணம் செய்துள்ளார். குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் நுழைந்ததால் டெல்லி கலவர பூமியானது. இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள சாவித்ரி பிரசாத் (23) என்ற பெண்ணுக்கும் மற்றொரு இந்து இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்து முறைப்படி செவ்வாய் அன்று…

மேலும்...

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 34 ஆக உயர்ந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் தற்போதைய தகவல்படி இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது….

மேலும்...