பிரதமர் கேர் நிதி குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு!

புதுடெல்லி (30 மே 2020): பிரதமர் கேர் நிதி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்ததற்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்க நிதி உதவி அளிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்ததின் பேரில், பி.எம்.கேர்ஸ் எனப்படும் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் என பலரும் நிதிஉதவி அளித்து வருகின்றனர். பிரதமர் நிவாரண நிதி PMNRF இருக்கும்போது இப்போ புதுசா எதுக்கு…

மேலும்...

பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்!

புதுடெல்லி (29 பிப் 2020): பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. சுபாங்கர் சங்கர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமை சான்றிதழ் குறித்து கேட்டிருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், “பிரதமர் மோடிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை. காரணம் அவர் பிறப்பிலேயே இந்தியர்” என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.. மேலும் பிரதமரின் ஆலோசகர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்திய குடியுரிமை…

மேலும்...

அமித் ஷா உள்ளிட்ட எம்பிக்களின் சொத்து விவரம் எங்கே? – தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி!

புதுடெல்லி (24 ஜன 2020): உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட 503 எம்பிக்கள் இதுவரை சொத்து விவபரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், 90 நாட்களுக்குள் தங்களது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து, வாழ்க்கைத்துணையின் சொத்து விவரங்கள், தங்களுடன் இருக்கும் பிள்ளைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 2019ம் ஆண்டு…

மேலும்...

மோடியின் குடியுரிமை ஆவணங்கள் எங்கே? – தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி!

திருச்சூர் (18 ஜன 2020): பிரதமர் மோடியின் குடியுரிமை ஆவணங்களை காட்ட வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்கபப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை…

மேலும்...