ததஜ தலைமை அலுவலகம் சீல் வைக்க முயற்சி -பதற்றம்!

சென்னை(06/01/2021): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை அலுவலகத்தை முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென சீல் வைக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை மண்ணடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென சீல் வைப்பதற்காக தமிழக உள்துறை செயலகத்திலிருந்து அதிகாரிகள் வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இயக்கத்தின் தொண்டர்கள் உடனடியாக அலுவலகத்தின் முன் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்….

மேலும்...

சிஏஏ வை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணி!

சென்னை (19 மார்ச் 2020): சிஏஏவை எதிர்த்து ததஜ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இணைந்து நேற்று சென்னையில் பேரணி நடத்தினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் டெல்லி ஷாஹீன் பாக் மாடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசின் உத்தரவை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க பல இஸ்லாமிய…

மேலும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்!

தஞ்சாவூர் (25 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தஞ்சாவூரில் ததஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு மேல வஸ்தா சாவடி ரவுண்டானா அருகில் முழக்கங்கள் எழுப்பி நடத்தப் பட்டது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார்….

மேலும்...