பாடபுத்தகத்தில் திப்பு சுல்தான் குறித்த அத்தியாயத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு!

பெங்களூரு (27 மார்ச் 2022): கர்நாடக அரசு பள்ளி பாடப்புத்தகங்களைத் திருத்தவும், திப்பு சுல்தான் உட்பட சில அத்தியாயங்களை நீக்கவும் திட்டமிட்டுள்ளது. மறுஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இதற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. கல்வித்துறை அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும். திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை முற்றிலுமாக நீக்க அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில், பள்ளி பாடநூல் மறுஆய்வுக் குழு சமீபத்தில் சமர்ப்பித்த…

மேலும்...

திப்பு சுல்தானை உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிடமுடியுமா? – ராஜ்கிரண் பளார் கேள்வி!

சென்னை (29 ஜூலை 2020): திப்பு சுல்த்தான் குறித்த பாடங்களை பாட புத்தகத்திலிருந்து நீக்கிவிடலாம் உங்கள் மூளையிலிருந்து நீக்கிவிட முடியுமா? என்று நடிகர் ராஜ்கிரண் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து தீரன் திப்பு சுல்த்தான் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “திப்பு சுல்தானை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கிவிடலாம்… இந்திய சரித்திரத்திலிருந்து நீக்கிவிட முடியுமா…?…

மேலும்...