தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு!

விருதுநகர் (16 ஜுலை 2020): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடையை மீறி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப் படுவது வழக்கம். கொரோனா பரவலால் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ – டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. எனினும், கொடியேற்றத்தை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர்…

மேலும்...

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று…

மேலும்...

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா

திருத்தணி (08 பிப் 2020): திருத்தணி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை, 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்திலும்,…

மேலும்...

குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவிழா!

குற்றாலம் (10 ஜன 2020): தென்காசி மாவட்டம் குற்றாலம் திருக்குற்றால நாதர் சுவாமி கோயில் திருவாதிரை திருவிழா ஜனவரி 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும் அருள்மிகு நடராஜர் திரு தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற திருக்குற்றாலத்தில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு மிக்கதுமான மார்கழி திருவாதிரை திருவிழா ஜனவரி ஒன்றாம் தேதியன்று விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் காலை மாலையில் சுவாமி…

மேலும்...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு!

திருச்சி (06 ஜன 2020): திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் பரமபதவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது. விழாவில் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுந்தமாகவும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 26–ந்தேதி தொடங்கியது. அதன் பின் பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய…

மேலும்...