முடிந்தும் முடியாத நிர்பயா வழக்கு – மீண்டும் தீர்ப்பு ஒத்தி வைப்பு!

புதுடெல்லி (02 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகளுக்கு எதிராக திகார் சிறைச் சாலை, மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா வன்புணர்வு படுகொலை வழக்கின் குற்றவாளிகளான அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், நால்வரும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில்…

மேலும்...

நிர்பயாவின் தாயார் நீதிமன்ற வளாகத்தில் கதறல்!

புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயாவின் தாய் டெல்லி நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதுள்ளார். நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை மீண்டும் ஒரு முறை தள்ளிப்போனதாலேயே நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி டத் வாரண்ட் ( தூக்கிலிடும்…

மேலும்...

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவு!

புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 06 மணிக்கு தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தர்விடிருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்ற கூடுதல்…

மேலும்...

நிர்பயா வழக்கில் குற்றவாளியின் மனு தள்ளுபடி – பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கு உறுதி!

புதுடெல்லி (29 ஜன 2020): நிர்பயா வழக்கில் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தது சரியே எனவும் உத்தரவிட்டனர். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி…

மேலும்...

நிர்பயா வழக்கு: தூக்குத் தண்டனை இப்போது இல்லை – டெல்லி அரசு!

புதுடெல்லி (15 ஜன 2020): நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லி அரசு அந்த தேதியில் நிறைவேற்றப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் ஜன 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை பெற உள்ள நிலையில், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த மனுவைக்…

மேலும்...

நிர்பயா வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு ஜன 22 ல் தூக்கு!

புதுடெல்லி (07 ஜன 2020): நிர்பயா வன்புணர்வு கொலைக் குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றார். அப்போது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட…

மேலும்...