பாஜகவுடன் இணைவதைவிட சாவதே மேல் – நிதிஷ்குமார்!

பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார். முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார். நிதிஷின் செல்வாக்கற்ற தன்மையால் 2020 சட்டசபை தேர்தலில் ஜே.டி.(யு) பல இடங்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஜெய்ஸ்வால் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள நிதிஷ்குமார், சாக நேரிட்டாலும் பாஜகவுடன் இணையமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தாம்…

மேலும்...

நிதிஷ்குமார் பாஜகவில் இணையப் போகிறாரா? – ஆர்.ஜே.டி தலைவர் கேள்வி!

புதுடெல்லி (27 டிச 2020): நிதிஷ்குமார் தனது கட்சியை பஜாகவுன் இணைக்க திட்டம் எதுவும் வகுத்துள்ளாரா? என்று ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா கேள்வி எழுப்பியுள்ளார். அருணச்சல பிரதேசத்தில் ஆறு ஜேடியு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் நிதிஷ்குமார் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ மட்டுமே அவரிடம் அங்கு உள்ளது. இந்நிலையில் பீகார் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா நிதிஷ்குமாரை கடுமையாக சாடியுள்ளார். @ஏழு எம்.எல்.ஏக்களில் 6 பேர் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர்…

மேலும்...

நிதிஷ்குமாருக்கு ஆப்பு வைத்த பாஜக!

பாட்னா (26 டிச 2020): அருணாச்சல பிரதேசத்தில், நிதீஷ் குமாரின் ஜனதா தளம் (ஜே.டி.யு) கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பீகாருக்குப் பிறகு, அருணாச்சல பிரதேசத்தில் நிதீஷ் குமார் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதன்மூலம் 7 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த நிதிஷ்குமார் கட்சியில் இப்போது ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார். இதற்கிடையில், அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியின் உறுப்பினர் உட்பட 48 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் உள்ளனர்.

மேலும்...

முதல்வர் மீது வெங்காய வீச்சு!

பாட்னா (03 நவ 2020): பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன்…

மேலும்...

கூட்டணியில் இருந்து கொண்டே பாஜக அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

பாட்னா (26 பிப் 2020): பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்புக்கு எதிராக, அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பிகாா் சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவந்தனா். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரங்கள் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். அதற்கு சட்டப் பேரவை விவகாரங்கள்…

மேலும்...

நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடருமா? – அமித் ஷா பதில்!

பாட்னா (16 ஜன 2020): பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை பாஜக சந்திக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- “குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால்…

மேலும்...

நிதிஷ்குமார் திடீர் மாற்றம் – பாஜக கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்பு!

பாட்னா (13 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தேவையில்லை என்றும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளமை பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் பாஜக கூட்டணியில் உள்ள முதல் கட்சியாக ஜேடியு உருவெடுத்துள்ளது….

மேலும்...