நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.

புதுடெல்லி (17 ஜூலை 2022) : நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 18.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர்…

மேலும்...

2022 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

புதுடெல்லி (31 மார்ச் 2022): 2022 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது நாளை மறுநாள் தொடங்கி மே 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 16 லட்சத்து 14ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என…

மேலும்...

அனாதை இல்லத்தில் வளர்ந்த ஷபானா ஷேக் – நீட் தேர்வில் வெற்றி!

தானே (21 பிப் 2022): நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததன் மூலம், தன்னாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் 22 வயது அனாதை பெண் ஷபானா ஷேக். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஷபானா ஷேக் தனது ஒரு வயது சகோதரனுடன் மும்பை மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்டு பத்லாபூரைச் சேர்ந்த அனாதை இல்லத்தில் வளர்ந்து வந்தார். இந்நிலையில் அனாதை இல்ல ஆதரவுடன் கல்வி பயின்று இரண்டு வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதினர்….

மேலும்...

நீட் தேர்வு ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? – நீதிபதி ஏ.கே ராஜன் விளக்கம்!

சென்னை (14 ஜூலை 2021): நீட் தேர்வு  ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி  ஏ.கே ராஜன் குழு இன்று சம்பர்ப்பித்தது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று அதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை…

மேலும்...

உதயநிதியின் பரபரப்பு கடிதம்!

சென்னை (23 ஜூன் 2021): நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு உதயநிதி மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், “நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள குழுவின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களுக்கும் குழுவினருக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள். இந்தக்குழு தமிழ்நாட்டின் பெற்றோர், மாணவர், ஆசிரியர், அறிவுசார் குழுக்கள் என அனைத்து…

மேலும்...

நீட் தேர்வுக்கு தடை – பாஜக அந்தர் பல்டி!

சென்னை (23 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் உடனடியாக பெற வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடு,…

மேலும்...

நீட் தேர்வின் கொடுமை – அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்!

சென்னை (21 ஜூன் 2021): நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் மெயில் அனுப்பலாம் என அறிவித்துள்ள நிலையில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை சண்முகம் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : வீட்டின் வறுமையை தாண்டி அனிதா 12ம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழகத்தின் தலை சிறந்த 2 மருத்துவ கல்லூரிகளில் பயில்வதற்கு போதுமானது . ஆனால் நீட்…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவில்லாத தமிழக அரசு!

சென்னை (20 ஜூன் 2021): நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் , வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார். எனவே தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகத் தான் வேண்டும் எனவும் நாளைய தினமே…

மேலும்...